பாதுகாப்பு காரணங்களுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநிலங்களவை எம்.பி., உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
ராம் ஜனம்பூமி-பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து நவம்பர் 24-ஆம் தேதி உத்தவ் தாக்கரே அயோத்தியாவுக்கு செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், புனித கோயில் நகரத்தைப் பார்வையிட அரசியல் கட்சிகளை ஏஜென்சிகள் அனுமதிக்கவில்லை.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில், பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மஹாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் நீட்டிக்கப்படுவதால், சிவசேனா தலைவர் நவம்பர் 24-ஆம் தேதிக்கு பின்னர் தனது அயோத்தி பயணத்தை மாற்றியமைத்துள்ளார், எனினும் பயணத்தின் தேதி உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில் மாநிலங்களவை கூட்டத்தொடரில் இன்று சஞ்சய் ரவுத், முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கள்களை பதிவு செய்துக்கொண்டார். மேலும் ஜெட்லியின் மறைவு தேசத்திற்கு ஒரு இழப்பு, ஆனால் இது சிவசேனாவுக்கு ஒரு பெரிய இழப்பாகும். தனது உத்தவ் ஜி மற்றும் தங்கள் கட்சி சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக ரவுத் குறிப்பிட்டார்.
முன்னதாக, சிவசேனா தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை அருகே, மகாராஷ்டிராவில் பருவமழை பெய்யாத மழையை இயற்கை பேரழிவு என்று அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.