காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை -EPS!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 28, 2018, 08:34 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை -EPS!  title=

சேலம்: ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி...! 

மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் முயற்சி காரணமாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை சட்டப் போராட்டம் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியோம் அமைக்க 6 வார காலத்துக்குள் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. மத்திய அரசு நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதையடுத்து, இது பற்றி ஏற்கனவே கடிதம் எழுதினோம். மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. நாடாளுமன்றம் முடக்கப்படும் அளவுக்கு மத்திய அரசுக்கு நமது எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பற்றி பேசிய இவர்; இந்த ஆலை ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கிறது. இப்போது அதை விரிவுபடுத்த முற்பட்டிருக்கிறார்கள். அதனால் அங்கிருக்கிற மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அதை அரசு உரிய முறையில் பரிசீலிக்கும். 

இப்பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று வழக்குகள் நடைபெற்றிருக்கிறது. அதை எல்லாம் பார்த்து ஒரு முடிவு காணவேண்டும் என முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Trending News