Google Pay டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கால் கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை என பரவிவரும் தகவல்உண்மையா?...
இந்தியாவில் தினசரி பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியாக Google Pay உள்ளது. இந்நிலையில், Google Pay செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை எனவும், அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி DN.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது ரிசர்வ் வங்கி தரப்பில், Google Pay எந்தப் பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை, மாறாக, இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலியே என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களது செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும், அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும், அதனாலேயே NPCI/RBI வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் Google Pay இடம்பெறவில்லை என Google Pay விளக்கம் அளித்ததுள்ளது.
Google Pay operates completely within the law. We work as a technology service provider to partner banks, to allow payments via UPI. UPI apps in the country are categorized as 'third party apps', and are not required to be 'payment systems operators'.
— Google Pay India (@GooglePayIndia) June 24, 2020
இந்த நிலையில், Google Pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல்கள் பரவுகின்றன. ரிசர்வ் வங்கியானது Google Pay செயலிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. மற்ற செயலிகளைப் போல Google Pay செயலியில் பணத்தை அனுப்புவது பாதுகாப்பான ஒன்றே. எந்த ஆபத்தும் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.