தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் தக்கர் பாபா அகாடமி பள்ளியில் சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை இன்று துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஹரிஜன சேவக் சங்கத்தின் விடுதி, பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகளின் கட்டுமானப் பணிகளுக்காக ஒரு சதுர அடி நில அளவு கட்டுமானப் பணி செய்வதற்கு ரூ.2,500/- தேவைப்படுகிறது. இந்த பணிக்கு ஆளுநர் அவர்கள் முதலில் ரூ.2,500/- நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார். மேலும், 51,000 மக்கள் ஒவ்வொருவரும் நன்கொடையாக ஒரு சதுரஅடி நில அளவு கட்டுமானப் பணி செய்வதற்கு ரூ.2,500/- வழங்கும்படியான தனது வேண்டுகோளை விடுத்தார். காந்தியப் பண்பாடு வளரவும் பொது மக்களின் பங்களிப்பு மேம்படவும், ஒரு அரசியல் சாராத, எந்த மதத்தையும் சாராத காந்திய இயக்கம் மேம்பட உதவும் என்றார். இது நன்கொடை மட்டுமல்ல, ஒரு பாசப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்றார். இந்த 51000 நன்கொடையாளர்களும் காந்திய இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு அகிம்சையும், அமைதியும் சமுதாயத்தில் நிலவ தொண்டு புரிய வேண்டினார்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நல் உள்ளங்கள் நிரம்பிய தொண்டு நிறுவனங்களுக்கும், 86 வயது பழம்பெரும் அமைப்பான ஹரிஜன சேவக் சங்கம் (மகாத்மா காயதியால் துவக்கப்பட்டது) மற்றும் அதனுடைய அனைத்து கிளைகளுக்கும் உதவும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
மகாத்மா காயதியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்டு அவர்களாலேயே தக்கர் பாபா என்று பெயர் சூட்டப்பட்டது. தக்கர் பாபா ஒரு பொறியாளராக இருந்தாலும், அவர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
மேலும், தக்கர் பாபா பள்ளி அன்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை RCC DIVA பெண்கள் இயக்கம் சீரமைத்து கொடுத்தது. இந்த தருணத்தில் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி குறிப்பிடும்போது ஔவையார், காரைக்கால் அம்மையார், இராணி லெட்சுமி பாய், இராணி மங்கம்மாள், அகல்யாபால் ஹோல்கர், கிட்டூர் சென்னம்மா, வேலூர் நாச்சியார், சரோஜினி நாயுடு, அம்புஜம்மாள், மதர் தெரசா, கல்பான சாவ்லா மற்றும் தற்போது இயதியாவிற்கு பெருமை தேடி தயத டி.வி.சியது, சயனா நோவால், சானியா மிஸ்ரா, மல்லேஸ்வரி மேரிகோம் உட்பட அனைவரையும் இயத தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
கல்வி என்பது சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார். இயதியா உலக அளவில் முன்னேற்றம் அடையது வருகிறது. இதை பெற நாம் அனைத்து வளங்களையும் கொண்டுள்ளோம். இதை நாம் அடைய தேசம் வழிமையுடனும், பொருளாதார வளர்ச்சியுடனும், கலாச்சாரத்தில் மேம்பட்டும், சமுதாயத்தில் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும் என்றார். பள்ளி மாணவ மாணவிகளிடையே கற்பிக்கப்படும் இக்கருத்துக்கள் தனிநபருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் வாழ்க்கையில் உதவும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சங்கர் குமார் சன்யால், தலைவர், அனைத்திந்திய ஹரிஜன சேவா சங்கம், திரு. ஜிடேன்திரா கன்கரியா, மனோஜ் கமலா கன்காரியா அறக்கட்டளை, திரு.ஞ.மாருதி, செயலாளர், தக்கர் பாபா வித்யாலயா சமிதி, திரு. ஜெயயதிலால் சல்லானி, திரு. சுதிர் கமார் லோடா, உறுப்பினர், சிறுபான்மையினர் ஆனையம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Source: ராஜ்பவன், சென்னை.