Paneer: நினைவாற்றலை அதிகரிக்கும் பன்னீரை ‘இப்படி’ சாப்பிடுங்க... நிபுணர்கள் அட்வைஸ்!

பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2023, 07:54 AM IST
  • பன்னீர் சாப்பிடும் போது உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
  • உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது.
Paneer: நினைவாற்றலை அதிகரிக்கும் பன்னீரை ‘இப்படி’ சாப்பிடுங்க... நிபுணர்கள் அட்வைஸ்! title=

ஆரோக்கியமான பால் உணவான பன்னீர், அனைவராலும் விரும்பப்படும் ஒரு உனவாக உள்ளது.  பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. இதில்  புரதம் மட்டுமல்லாது, செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது  உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை, குழந்தையின்மை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு உள்ளதால், இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

சுவையில் சிறந்த பன்னீர் சாப்பிட விரும்பாத சைவ உணவு பழக்கம் உள்ளவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், முழுமையாக அதன் ஊட்ட சத்துக்களை பெற முடியும். பலருக்கு, பன்னீரை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது பொரித்தால் நல்லதா என்ற குழப்பம் உள்ளது. பன்னீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பன்னீரில், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ள நேரத்தில், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன. பன்னீர் உட்கொள்வதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதற்கு இதுவே காரணம்.

சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் பன்னீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பன்னீரை சமைக்கும் போது, அதில் உள்ள சில சத்துக்கள் அழிந்துவிடும். இதன் காரணமாக நீங்கள் அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

மேலும், பன்னீரில் ஏராளமான புரதங்களும் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும். பன்னீர் சாப்பிடும் போது உடனடி ஆற்றல் கிடைக்கிறது. இது உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது. பன்னீர் என்பது லினோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

சாப்பிடும் முன் பேக் செய்யப்பட்ட பன்னீரை சுத்தம் செய்ய வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வீட்டிலேயே பன்னீர் தயாரிக்கிறீர்கள் என்றாலும்ன் சரி, அல்லது நல்ல தரமான பன்னீர் வாங்கி வந்தாலும் சரி, அதை பச்சையாகவே சாப்பிடலாம். மறுபுறம், நீங்கள் கடையில் பேக் செய்யப்பட்ட பனீரை வாங்கியிருந்தால், அதை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து சுத்தம் செய்வது நல்லது.

பேக் செய்யப்பட்ட, சில நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், அதில் அழுக்கு அல்லது பாக்டீரியா வளரும் அபாயம் உள்ளது. அதனால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்த பிறகு, பன்னீரை எடுத்துப் பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான கருத்துக்களௌஇ அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதனை அங்கீகரிக்கவில்லை.)

மேலும் படிக்க | நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News