இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை பயன்படுத்துங்கள்

Skin Care Tips: சருமத்தை சுத்தப்படுத்த பலகாலமாக கடலை மாவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 05:05 PM IST
  • கடலை மாவின் நன்மைகள்.
  • இறந்த சருமம் பளபளவெனவாகும்.
  • பொலிவிழந்த சருமத்திற்கு கடலை மாவு பேக்.
இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை பயன்படுத்துங்கள் title=

சருமத்திற்கு கடலை மாவின் நன்மைகள்: கடலை மாவு நமது சருமத்தில் இருக்கும் அசுத்தங்கள் சுத்தம் செய்ய பயன்படுகிறது. ஏனெனில் கடலை மாவு சருமத்தில் ஆழமாகச் சென்று சுத்தப்படுத்த உதவுகிறது. இது தவிர, கடலை மாவில் உள்ள ஊட்டச்சத்துக்களால் சருமத்திற்கு பல நன்மைகளைப் தருகிறது. இவை சாருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, தொற்றுநோயை அகற்றவும் உதவுகிறது. அதே சமயம், மழைக்காலத்தில் சருமம் எண்ணெய் பசையாக மாறும். அப்படிப்பட்ட நிலையில் கடலை மாவைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய, சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை அகற்றலாம். எனவே இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

கடலை மாவின் நன்மைகள்
கடலை மாவு என்பது கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை தயிர் அல்லது நீரில் கரைத்து ஒரு பசைபோல் ஆக்கி பின் அதை முகப்பொலிவு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடலை மாவு அதிக மாவுச்சத்து கொண்டது, மற்ற மாவுகளை விட அதிக நார்ச்சத்தும் கொண்ட பொருள். குளுட்டன் இதில் இல்லை. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். அதேபோல் கடலை மாவில் புரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், தயாமின், காப்பர், ஸின்க் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை முகப் பொலிவை அதிகரிக்கசி செய்யும்.

மேலும் படிக்க | சூட்டை தணிக்கும் துளசி விதை..! கொட்டி கிடக்கும் கோடி மகத்துவம்

கடலை மாவு நமக்கு எவ்வளவு பெரிய நன்மைகளை வழங்குகிறது என்று பார்ப்போம். 

1. கடலை மாவில் செய்யப்பட்ட பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த சருமம் பளபளவெனவாகும். இதனால் உங்கள் முகம் பொலிவடைய ஆரம்பிக்கும். அதை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் கடலை மாவு
1 தேக்கரண்டி தேன்
தயிர் (தேவைக்கேற்ப)

செயல்முறை
* ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் சேர்க்கவும்.
* பின்னர் ஒரு கரண்டியால் எல்லாவற்றையும் கலக்கவும்.
* இந்த பேஸ்ட் கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் தாக்கம் முகத்தில் வெளிப்படும்.

எப்படி அப்ளை செய்வது
* முதலில் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
* பின்னர் இந்த பேக்கை உங்கள் முகத்தில் பிரஷ் மூலம் தடவவும்.
* 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
* இப்போது உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
* இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.

2. தோல் பதனிடுவதால் சருமத்தின் பொலிவும் இழக்கப்படுகிறது. இதனால் நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு கடலை மாவையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் கடலை மாவு
2 சிட்டிகை மஞ்சள்
எலுமிச்சை சாறு சில துளிகள்

செயல்முறை
* ஒரு சிறிய பாத்திரத்தில், 2 ஸ்பூன் கடலை மாவு, 2 சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும்.
* அவற்றை நன்றாக கலக்கவும்.
* கடலை மாவு ஃபேஸ் பேக் தயார்.

எப்படி அப்ளை செய்வது
* இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவவும்.
* பிறகு சுமார் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
* இதற்குப் பிறகு, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்து: இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News