தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க - நல்ல தூங்கலாம்!

Home Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 18, 2024, 07:04 AM IST
  • 6 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை ஒருவர் தூங்க வேண்டும்.
  • பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.
  • உணவுப்பழக்க வழக்கமும் இதில் முக்கிய காரணம்.
தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க - நல்ல தூங்கலாம்! title=

Home Remedies To Get Good Sleep: இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களிடையே நல்ல பழக்கவழக்கம் சார்ந்து பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரச் சூழல் ஒருபுறம் என்றால், மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, குடும்ப அமைப்பின் மாற்றம் ஆகியவையும் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதை கடினமாக்குகின்றன. 

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 6 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அதிக உடலுழைப்பு இருப்பவர்கள் சிலர் 8 மணிநேரம் வரையிலும் தூங்கலாம். இப்படி தூங்கினால் மட்டுமே அன்றைய தினத்தை உங்களால் சிறப்பாக தொடங்கி, அனைத்து காரியங்களையும் முழு கவனத்துடனும், சிரத்தையுடனும் செய்ய முடியும். தூங்கவில்லை என்றால் அந்த நாளில் பாதி காரியங்கள் சொதப்பிவிடும். இது உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும். 

ஆனாலும், சிலர் இதுபோன்ற போதுமான தூக்கத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். 5 மணிநேரத்திற்கும் குறைவாகதான் அவர் தூங்குகின்றனர். இது அவர்களின் நாளை மட்டுமின்றி உடல்நலனையும் ஒருநாள் பாதிக்கும். குறைவாக தூங்குவதும் அளவுக்கு அதிகமா தூங்குவதும் பிரச்னைதான். சரியாக தூக்கம் வராததற்கு மனநல பிரச்னைகள் சார்ந்து பல காரணிகள் உள்ளன. 

மேலும் படிக்க | Brain Foods: உங்கள் சுட்டிக் பிள்ளையின் மூளை... சூப்பராக வேலை செய்ய..!

தூக்கமின்மை இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. உணவுப்பழக்க வழக்கமும் இந்த பிரச்னைக்கு ஒரு முக்கிய காரணி. அந்த வகையில் உங்களின் தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வளிக்கும் சில உணவுகளை இங்கு பரிந்துரைக்குறோம். இவற்றை நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் உண்கொண்டால் தூக்கம் விரைவாகவே வரும், தூக்கமின்மை பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். 

பாதாம்

பாதாமில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. மெக்னீசியம் என்பது உடலை ஓய்வெடுக்க உதவிபுரியும். மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் நீங்கள் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படும்போது இது சிறந்த நிவாரணம் அளிக்கும். இது மட்டுமின்றி, மெலடோனின் என்ற ஹார்மோன் பாதாமில் இருக்கும். இது உங்களின் தூக்க சுழற்சியை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

கெமோமில் தேயிலை

தூக்க பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இதனை பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு ஆய்வின்படி, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அபிஜெனின் எனப்படும் கூறுகள் இருக்கின்றன. இவை அலைப்பாயும் மூளையை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை வரவழைக்கவும் உதவுகின்றன. தூங்கும் முன் ஒரு கப் கெமோமில் டீ தேநீர் அருந்துவது தூக்கத்தை சீராக்கும்.

பேரீச்சம்பழம்

இதிலும் மெக்னீசியம் காணப்படுகின்றது. இதோடு, டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் மூலக்கூறும் உள்ளது. இவை நல்ல தூக்கத்திற்கு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், பேரீச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு எனர்ஜியை தரும். மேலும், பேரீச்சம்பழத்தை நீங்கள் தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். சாப்பிட்டுவிட்டு உடனே உறங்கினால் ரத்த சர்க்கரை அளவில் ஏற்றம் வரும்.

பால்

டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் பாலில் இருக்கிறது. இது உடலில் செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது. செரோடோனின் தூக்கத்தை சீராக்கும் முக்கிய ரசாயனமாகும். எனவே தூங்கும் முன் இதமான சூட்டில் பால் குடிப்பது நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

(பொறுப்பு துறப்பு: தூக்கமின்மைக்கான உணவுகள் குறித்த இந்த செய்தி, வீட்டு வைத்தியம் சார்ந்த பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளவும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை நீங்கள் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | சவால் விடும் சுகர் லெவலை சுலபமாக குறைக்க இந்த உணவுகை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News