Oily Skin Natural Home Remedies Tips: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது பாேல, அவர்களின் முகச்சருமத்தின் தன்மையும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அந்த சரும வகைகளில் ஒன்று, ஆய்லி ஸ்கின் (Oily Skin). இதனை, முகத்தில் எண்ணெய் வடியும் தன்மை என்று கூறுவர். இந்த சருமத்தை கொண்ட பல வாலிபர்களும் இளம் பெண்களும் தங்களது சருமம் இது போல இருக்கிறதே என எண்ணி மிகவும் கவலைகொள்வர். அவர்களின் கவலையை தீர்க்கவும், இந்த எண்ணெய் வழியும் சருமத்தில் இருந்து விடுதலை பெறவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
ஆயுர்வேத மருத்துவம்:
பலரிடையே காணப்படும் மிகவும் பொதுவான வகை சருமம், எண்ணெய் வடியும் சருமம் ஆகும். மனச்சோர்வு, மரபியல் பிரச்சனை, ஈரப்பதம் இன்மை, மாசுபாடு, ஹார்மோன் மாறுபாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களினால் முகத்தில் எண்ணெய் வடியலாம்.
ஆய்லி ஸ்கின்னுடன் இருப்பவர்களுக்கு சருமம் மிகவும் அடர்த்தியாக இருக்கும் என்றும், இவர்களுக்கு அவ்வளவு விரைவாக சுருக்கம் வந்துவிடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, ஒரு இயற்கையான மாய்ஸ்ட்ரைசராகவும் விளங்குகிறது. இருப்பினும், சருமத்தில் மிகவும் அதிகமாக எண்ணெய் வடிவது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க சில ஆயுர்வேத முறைகளை பின்பற்றுவது அவசியம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சருமத்தை மென்மையாக சுத்தம் செய்தல்:
சருமத்தை சுத்தம் செய்வதை, க்ளென்ஸ் செய்வது என குறிப்பிடுவர். இதற்காக எந்த பிரத்யேக எண்ணெயையும் உபயோகிக்க வேண்டாம். இதை சாதாரண சோப், தண்ணீர் கொண்டு செய்யலாம். இதனால், முக சருமத்தின் மேல் அடுக்கில் இருக்கும் அழுக்குகள், மேக்-அப் துகள்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய உதவுகின்றன. இதை செய்வதால் முகம் மென்மையாகமாறி, வறட்சி அடைவதில் இருந்து தவிர்க்கும்.
மாய்ஸ்ட்ரைசர்:
முகத்திற்கு சரியான அளவிலான மாய்ஸ்ட்ரைஸரை உபயோகிப்பது மிகவும் முக்கியம். இதனை, உங்கள் சரும வகைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டியதும் மிகவும் முக்கியமாகும். லேசான மற்றும் ஆயில்-ஃப்ரீ மாய்ஸ்ட்ரைசரை தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிக்க | கிட்ட வரும் நோய்களை மொத்தமாக காலி செய்யும் காய்கறி சாறுகள்: கண்டிப்பா குடிங்க!!
எக்ஸ்ஃபோலியேஷன்:
முகத்தில் உள்ள இறந்து போன சரும செல்கள் மற்றும் மூடியிருக்கும் போர்ஸ்களை திறக்க, எக்ஸ்ஃபோலியேஷன் உதவும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனை செய்ய வேண்டும். இதனை ஸ்க்ரப்ஸ்களை உபயோகித்து செய்யலாம். ஆனால், அவற்றை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் கொள்ள வேண்டும். அப்படி சரியானதை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது உங்கள் சருமத்தை இன்னும் மோசமாக்கிவிட வாய்ப்புள்ளது. சருமத்தை இன்னும் சரியாக பராமறிக்க நன்றாக தண்ணீர் குடித்து, வைட்டமின் சத்துக்களை தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.
சன்ஸ்க்ரீன்:
வெளியில் செல்கையில் எதை எடுத்துக்கொண்டு/உடுத்திக்கொண்டு செல்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்துவதில் இருந்து தவறக்கூடாது. இதை பயன்படுத்த எந்த வயது வரம்பும் தேவையில்லை. வெயிலினால் முக சருமத்தில் வெடிப்பு விழுவது, சருமம் வறட்சி ஆவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் எஸ்.பி.எஃப். 60 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்க்ரீன்களை தேர்வு செய்யுங்கள்.
கற்றாழை:
கற்றாழையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் பண்புகள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை ஹெல்தியாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் குளிரவைக்கும் தன்மை, உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பரும், முகம் சிவத்தல் ஆகியவற்றை தவிர்க்க உதவும். போனஸ் ஆக, முகத்தை வழவழப்பாகவும் பொலிவாக வைத்திருக்கவும் கற்றாழை உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் ஆயத்த உணவுகள்! இதெல்லாம் ரெடிமேட் உணவுகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ