அற்புத பலன்களைத் தரும் பலாவின் பலாபலன்கள்! யாரெல்லாம் பலாவுடன் ‘டூ’ விட வேண்டும்?

Who Should Avoid Jackfruit :  எப்படி பலாவை பயன்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொண்டால், அற்புதமான காய்கனியான பலா நல்ல பலன்களைத் தரும். பலாவின் பலாபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 18, 2024, 07:43 PM IST
  • யாரெல்லாம் பலாப்பழத்தை சாப்பிடவேக்கூடாது?
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்
  • வயதானவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா?
அற்புத பலன்களைத் தரும் பலாவின் பலாபலன்கள்! யாரெல்லாம் பலாவுடன் ‘டூ’ விட வேண்டும்? title=

சதைப்பற்றுள்ளது, நார்ச்சத்துள்ளது, ஊட்டச்சத்துக்களின் சுரங்கம், முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைப் பெற்றுள்ள பலாப்பழம் இயற்கையாகவே இனிப்பானது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பலாப்பழமும், மா மற்றும் வாழையைப் போலவே, காயாகவும், பழமாகவும் பயனபடுத்தக்கூடியது. 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பலாப்பழம் இதய நோய், புற்றுநோய், கண்புரை போன்ற பல்வேறு சுகாதார நிலைகளைத் தடுக்க உதவும் அருமருந்து காய் மற்றும் பழம் ஆகும். வைட்டமின் பி மற்றும் சி மற்றும் தாதுக்களின் வளமான மூலமான பலாப்பழம், காயாக பயன்படுத்தும்போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள  பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அற்புதமான பழம் பலா தான். காயை சமைத்தால், இறைச்சி போன்று இருக்கும். இத்தனை நன்மைகள் இருந்தாலும், சிலர் பலாப்பழத்தின் பக்கமே போகக்கூடாது. 

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது எப்படி பலாவை பயன்படுத்தக்கூடாது என்று கேள்விகள் எழும். அதைத் தெரிந்துக் கொண்டால், அற்புதமான காய்கனியான பலா, நல்ல பலன்களைத் தரும். பலாவின் பலாபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு நைட் டைம் டிப்ஸ்! இந்த 5 வேலையை செய்தால் சர்க்கரை அளவு அதிகரிக்காது!

என்று கேட்டால், செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அதிலும், உடல் பருமனானவர்கள் பலாப்பழத்தை சாப்பிடவேக் கூடாது. மரத்திலேயே பழுத்த பலாப்பழத்தை உண்பது நல்லது. ஆனால், பழுக்காத பலாப்பழத்தை பறித்து, அதன்பின் பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ அஜீரணக் கோளாறுகள் தோன்றும்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுப்பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.  அதில், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, பால் குடிக்கவேக் கூடாது என்பது முக்கியமான ஒன்று. பலா உண்ட பிறகு பால் குடித்தால், அது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

பலாப்பழத்தை தேனில் ஊறவைத்து உண்பார்கள். ஆனால்,  இது மிகவும் தவறானது. ஏனென்றால், தேனும் பலாப்பழமும் இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், வெண்டைக்காய் மற்றும் பலாவின் குணங்கள் எதிர்மாறானவை. இரண்டுமே ஊட்டச்சத்து மிக்கவை என்றாலும், ஒன்றன்பின் மற்றொன்றை உண்பதால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். அப்படி சாப்பிட்டால், சரும பிரச்சனைகள் தோன்றும், ஏற்கனவேர் தோலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனை கூடிவிடும்.

மேலும் படிக்க | LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை ஒழித்து கட்ட உதவும்... மேஜிக் மசாலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Trending News