கடைகளில் பீடி சிகரெட்டுக்களை தனித்தனியாக விற்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், சிகரெட் மற்றும் புகையிலை சட்டத்தின் 7 மற்றம் 8 வது பிரிவுகளின் படி, புகையிலை பொருட்கள் பாக்கெட்டில், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை படம் இருக்க வேண்டும். மற்றும் சிகரெட்டை பாக்கெட்டில் மட்டுமே விற்கவேண்டும், சில்லரையாக சிகரெட் விற்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளன.
இது ஒரு முழுபாக் கெட்டாக வாங்கும் பொது அட்டையில் உள்ள எச்சரிக்கை தெரிந்து கொள்ள முடியும் என்றும், சில்லரையாக வாங்கும் பொது எச்சரிக்கை படத்தை பார்க்க வாய்ப்பில்லாத காரணத்தினால் தான் இச் சட்டம் கொண்டுவர பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.