தொப்பை விழுதல் பிரச்சனை இக்காலங்களில் அனைவருக்குமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முன்னர் நடுத்தர வயதினருக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் இருந்த இந்த பிரச்சனை இப்போது சிறுவயதினருக்கும் ஏற்படுகின்றது.
மோசமான வாழ்க்கை முறை, ஃபாஸ்ட் புட், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. நீங்களும் தொப்பை பிரச்சனை அல்லது கொழுப்பு அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான பதிவு. இவற்றை குறைக்க நீங்கள் ஜிம்மிற்கு கூட செல்ல வேண்டிய அவசியமில்லை.
மேலும் இதற்காக நீங்கள் விலை அதிகமாக உள்ள பொருட்களை வாங்கவும் வேண்டாம், கடினமான உடற்பயிற்சிகளை செய்யவும் வேண்டாம். மாறாக, உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து சில நாட்களிலேயே உங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
உடல் பருமன் புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், ஆரோக்கியமான வழக்கத்தைப் பின்பற்றி உடல் பருமனின் பிடியில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவது முக்கியம்.
காலையில் எழுந்தவுடன் சில குறிப்பிட்ட வேலைகளை செய்தால், அது உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதோடு, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
கடின உழைப்பு இல்லாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய வழிகளைப் பற்றி இங்கே காணலாம்:
1. அதிகாலையில் தண்ணீர் குடிக்கவும்
காலையில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். முடிந்தால் ஒரு கிளாஸ் வெந்நீரை குடிக்கவும். இது உங்கள் கலோரிகளையும் கொழுப்பையும் வேகமாக எரிக்கும். இது தவிர, உங்கள் உடலும் நீரேற்றமாக இருக்கும். மிக விரைவில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து, உடல் வடிவம் பெறும்.
மேலும் படிக்க | மஞ்சள் தண்ணீரின் மகத்தான நன்மைகள்: இன்றே பருக துவங்குங்கள் https://zeenews.india.com/tamil/health/amazing-benefits-of-drinking-turm...
2. அதிக புரதம் கொண்ட காலை உணவு
காலை உணவுக்கு முட்டை மற்றும் பால் போன்ற புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன், காலை உணவின் அளவை குறைக்கக்கூடாது. காலை சிற்றுண்டுயை வயிறு நிரம்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. சிறிது சூரிய ஒளியும் அவசியம்
உடலில் வைட்டமின் டி அளவும் எடையை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதிகரிக்கும் எடையைக் குறைக்க வைட்டமின் டி உதவிகரமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, காலை சூரியன் உடலில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
4. எடையை அவ்வப்போது செக் செய்யவும்
உடல் எடையை குறைக்க, உங்கள் எடையை அடிக்கடி பரிசோதிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் தொடர்ந்து உந்துதல் பெறுவீர்கள்.
5. தியானம்
உடல் எடையை குறைக்க, மிகவும் கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை தவிர்த்து, தினமும் காலையில் தியானம் செய்வதை பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம், படிப்படியாக ஆனால் கணிசமான வித்தியாசம் உங்கள் எடையில் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் எடையில் மட்டுமல்ல, இது உங்கள் சருமம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் இந்த பச்சை சாறு: கொத்து கொத்தாய் நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR