20 நாட்களில் நச்சுனு எடையை குறைக்கணுமா? இதை பண்ணுங்க போதும்

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வாழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2024, 11:44 AM IST
  • போதுமான அளவு தூக்கம் தேவை.
  • உடற்பயிற்சி அவசியம்.
  • பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நாட்களில் நச்சுனு எடையை குறைக்கணுமா? இதை பண்ணுங்க போதும் title=

Weight Loss Tips: இன்றைய நவீன உலகில் உடல் பருமன் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. உடல் எடை அதிகரிப்பதால் பலரது நம்பிக்கை குறைவதோடு, இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 

உடல் பருமனால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகி வருகிறது. தொப்பை கொழுப்பு (Belly Fat) மிகப்பெரிய பிரச்சனை ஆகி வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில எளிய, இயற்கையான வாழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். 20 நாட்களில் எடையைக் குறைக்க பெரிதும் உதவும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் (Balanced Food)

நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகள் உடல் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக மாறி வருகின்றன. ஆகையால், உடல் எடையை குறைக்க விரும்பினால், வீட்டில் சமைத்த உணவையே எப்போதும் சாப்பிட வேண்டும். பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, எளிய முறையில் வீட்டில் செய்த உணவையே உண்ண வேண்டும். வீட்டிலும், அனைத்து வித ஊட்டச்சத்துகளும் இருக்கும் சமச்சீர் உணவை உண்ண வேண்டும்.

பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் (Fruits)

பழங்களை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் எடையைக் குறைக்க உதவுகின்றன. காலை மற்றும் மாலை ஸ்நாக்ஸில் பழங்களை சேர்த்துக்கொண்டால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். எப்போதும் பருவகால பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலும் படிக்க | எச்சரிக்கை... டீ - காபி அதிக சூடாக குடிப்பீர்களா... புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்

உடற்பயிற்சி அவசியம் (Exercise)

நாம் நாள் முழுவதும் சாப்பிடுவதில் செலவிடும் அதே அளவு நேரத்தை தினசரி உடற்பயிற்சியிலும் செலவிட வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. பொதுவாக, தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்க அவசியம் என்று கருதப்படுகிறது. ஆகையால், தொப்பை கொழுப்பை குறைத்து வேகமாக உடல் எடையை குறைக்க, காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

போதுமான அளவு தூக்கம் (Sleep)

இன்றைய நவீன உலகில், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வேலை அழுத்தம் காரணமாக, தூக்கத்தின் அளவும் தரமும் குறைந்து வருகிறது. இதன் நேரடி விளைவாக உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தினமும் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

இவற்றை தவிர்ப்பது நல்லது

உடல் எடையைக் குறைக்க, உணவுப் பொருட்களை சரியாக தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, சில விஷயங்களைக் கைவிடுவதும் முக்கியம். விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் இருந்து சர்க்கரை, மைதா, அதிக உப்பு ஆகிய மூன்று வெள்ளை நிற பொருட்களையும் நீக்க வேண்டும். இது வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News