பல வித காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். சில காய்களை பலருக்கு பிடிக்கும். சில காயக்ளை யாருக்கும் பிடிக்காது. ஆனால், பிடிக்குமா பிடிக்காதா என புதிராய் இருக்கும் ஒரு காய் சுரைக்காய்!!
சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு சுரைக்காய் பிடிப்பதில்லை. சிலருக்கோ இதன் வித்தியாசமான சுவை மிகவும் பிடித்தும் இருக்கிறது.
சுரைக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதை சாப்பிடுவதால், அனைத்து பருவங்களிலும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும், நமது அன்றாட உணவில் சுரைக்காயை சேர்க்கும் 5 வழிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
சுரைக்காயை இந்த வழியில் சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்
- சுரைக்காய் கோஃப்தா
- சுரைக்காய் தயிர் பச்சடி
- சுரைக்காய் கறி
- உருளைக்கிழங்கு சுரைக்காய் கறி
- சுரைக்காய் கடலை பருப்பு கூட்டு
சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால், உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படும். அதாவது, வெப்பத்தை எதிர்த்து போராட இது உதவுகிறது.
- சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்: முகம் பளிச் என்று பளபளக்கும்
- சுரைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்காது.
- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நீங்கள் உண்ணும் அனைத்து உணவின் முழுப் பலனையும் உடல் பெறுகிறது.
- சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க இது உதவுகிறது.
- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
- வாந்தி, பேதி சங்கடம் ஏற்பட்டால் சுரைக்காய் தயிர் பச்சடி சாப்பிட்டால், இந்த பிரச்சனைகள் கட்டுப்படும். பலவீன உணர்வு இருக்காது.
சுரைக்காய் நன்மைகள்:
- வெப்பத்தால் வரும் மயக்கம்
- உடலில் நீர் பற்றாக்குறை
- வெப்ப பக்கவாதம்
- வாந்தி, பேதி சங்கடம்
- வெப்பம் காரணமாக பதட்டம்
- வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல்
- வெப்ப சோர்வு
- வெப்ப அழுத்தம்
சுரைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், வெயில், தூசி, வியர்வை, அதிக வெப்பம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR