வைட்டமின் பி9 குறைபாடு: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் தேவைப்படுகிறது, அதிலும் வைட்டமின் பி9 அதாவது ஃபோலிக் அமிலம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. பொதுவாக வைட்டமின் பி9 நம் உடலில் உள்ள சேதமடைந்த செல்களை சரி செய்ய உதவுகிறது. அதே நேரத்தில், வைட்டமின் பி9 ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில், வைட்டமின் பி9 குறைபாட்டால், உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் பி9 குறைபாட்டால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வைட்டமின் பி9 குறைபாட்டின் அறிகுறிகள்
உடலில் இரத்த சோகை ஏற்படும்: வைட்டமின் பி9 குறைபாட்டின் முதல் அறிகுறி உடலில் இரத்த சோகை ஏற்படத் தொடங்கும். ஏனென்றால், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை உருவாக்க ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது. உடலில் வைட்டமின் பி9 சத்து குறையும்போது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையலாம். எனவே உங்கள் உடலிலும் இரத்தம் குறைவாக இருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
மேலும் படிக்க | துளசி நல்லது, ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்
பலவீனம் / சோர்வு: நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், இதற்கு காரணம் வைட்டமின் பி9 குறைபாடக இருக்கலாம். ஏனென்றால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, ஆக்ஸிஜன் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது, இதன் காரணமாக உடலில் சோர்வு உணரப்படுகிறது. அதுமட்டுமின்றி வைட்டமின் பி9 சத்து குறைவதால் சருமத்தின் நிறம் மஞ்சள் நிறமாக மாற தொடங்குகிறது.
சிறு வயதிலேயே நரை முடி ஏற்படும்: வைட்டமின் பி9 குறைபாடால் சிறு வயதிலேயே முடி நரைக்கக் கூடும். முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ