Dark Chocolate: மனதை ஊக்கப்படுத்தும் டார்க் சாக்லேட்! சாக்லேட் எடு கொண்டாடு

Best Chocolate For Health: சாக்லேட் என்றால் சப்புக் கொட்டும் பலருக்கும் டார்க் சாக்லேட் பிடிப்பதில்லை. இந்த சாக்லெட்டின் சுவை அனைவருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதன் ஆரோக்ய குணத்தை அறிந்தவர்கள் யாரும் டார்க் சாக்லேட்டை கண்டிப்பாக சாப்பிடுவார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 10, 2023, 04:06 PM IST
  • டார்க் சாக்லேட் ஆரோக்கிய நன்மைகள்
  • டார்க் சாக்லெட்டின் சுவை அனைவருக்கும் பிடிக்காது
  • டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?
Dark Chocolate: மனதை ஊக்கப்படுத்தும் டார்க் சாக்லேட்! சாக்லேட் எடு கொண்டாடு title=

Chocolate For Health: சாக்லேட் என்றால் சப்புக் கொட்டும் பலருக்கும் டார்க் சாக்லேட் பிடிப்பதில்லை. இந்த சாக்லெட்டின் சுவை அனைவருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதன் ஆரோக்ய குணத்தை அறிந்தவர்கள் யாரும் டார்க் சாக்லேட்டை கண்டிப்பாக சாப்பிடுவார்கள்.  இதய ஆரோக்கியம் முதல் மூளையின் செயல்பாடு மேம்படுவது வரை, பல ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ள சில இனிப்புகளில் ஒன்று டார்க் சாக்லெட்.

உங்கள் உணவில் டார்க் சாக்லேட் சேர்க்கப்பட வேண்டிய இந்த ஐந்து காரணங்கள் மட்டும் போதும்.

இதய ஆரோக்கியம்

இதய நோய் வராமல் இருக்கும் வாய்ப்பைக் குறைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது.  டார்க் சாக்லேட்டிலுள்ள ஃபிளேவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இரத்தம் உறைவதைத் குறைக்கவும் உதவுகிறது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மேலும் படிக்க | எச்சரிக்கை!அளவிற்கு அதிகமான பப்பாளி உணவுக் குழாயை சுருக்கி விடும்!

ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள்

டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உங்கள் உடலை பாதுகாக்க உதவும் டார்க் சாக்லேட், ஆரோக்கியம் மேம்படவும், நோய்களைத் தடுப்பதற்கும் தேவையானது என பலர் பரிந்துரைக்கின்றனர். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது.

மூளையின் செயல்பாடு

டார்க் சொக்லேட்டில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய கஃபீன், தியோபுரோமின் ஆகியவை அடங்கியுள்ளன. கஃபீன் கவனத்தை அதிகரிக்கவும் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதேசமயம் தியோபுரோமின் மன நிலையை மேம்படுத்தவும் மனதின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், டார்க் சாக்லேட்டில் ஃப்ளெவனாய்டுகளும் அடங்கியுள்ளன, இது மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | என்ன செஞ்சாலும் சுகர் குறையலையா.. காலையில் வெறும் வயிற்றில் வெங்காய ஜூஸ் குடிங்க!

அழுத்தங்களை குறைக்கும் பண்பு

டார்க் சாக்லேட், மன அழுத்தங்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டார்க் சொக்லேட்டில் ஃப்ளெவனாய்டுகளும் செரோடோனின், எண்டோர்பின் போன்ற இயற்கையான கலவைகளும் உயர்ந்த அளவு அடங்கியுள்ளன. இந்த கலவைகள் மன நிலையை மேம்படுத்த உதவும். அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் டார்க் சாக்லேட் உதவுகிறது.  

சரும ஆரோக்கியம்

டார்க் சாக்லேட், நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்சிடன்ட்கள், புற உதாக்கதிர்களில் இருந்து ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.  சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் வேலையை டார்க் சாக்லேட் செய்கிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் ஒரு நிபுணரை அணுகவும்.)
 
மேலும் படிக்க | எச்சரிக்கை! பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாமே !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News