Health Tips: பெண்களின் உடல் வாகிற்கும் ஆண்களின் உடல் வாகிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடல் பல வித மாற்றங்களை எதிர்கொள்கிறது. மாதவிடாய் நாட்கள் தொடர்பான பல சந்தேகங்களும் பெண்களுக்கு இருப்பதுண்டு. இந்நாட்களில் உடல் எடையை குறைக்க பெண்கள் ஜிம் செல்கிறார்கள், சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? இந்த குழப்பம் பலருக்கு இருப்பதுண்டு. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாதவிடாய் காலமான 3-4 நாட்கள் பெண்களுக்கு சாதாரண நாட்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் வலி மற்றும் சோர்வு உணர்வு இந்நாட்களில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில், உடலில் எந்த விதமான குறைபாடும் ஏற்படாதவாறு ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். பீரியட்ஸின் போது உடற்பயிற்சி செய்யலாமா? உடற்பயிற்சி செய்வதால் வலி குறையுமா அல்லது அதிகரிக்குமா? இது போன்ற பல கேள்விகளுக்கான விடை கூகுளிலும் தேடப்படுகின்றன. இந்தக் கேள்விகள் தொடர்பான தகவல்களை இங்கே காணலாம்.
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?
மாதவிடாய் காலத்தில் ஒருவர் உடற்பயிற்சி செய்யலாம் என்றும், ஆனால் தீவிரமான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் யோகா வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சாதாரண உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால், அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக, நமது உடல் பிடிப்புகள், தசைவலி, சோர்வு மற்றும் பதட்டத்தை உணர்கிறது. மாதவிடாய் காலங்களில் அதிக உடற்பயிற்சி செய்வதால் இடுப்பு மற்றும் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். எனவே, மாதவிடாய் காலத்தில் லேசான உடற்பயிற்சியை மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.
சோம்பம், பலவீனம் நீங்கும்
- மாதவிடாயின் போது தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால், உங்கள் சோம்பல் மற்றும் பலவீனம் நீங்கும். இதனுடன் அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளும் வெகுவாகப் போய்விடும்.
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மார்பக வீக்கமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கணிசமாகக் குறைகிறது. இந்த நாட்களில் பல பெண்கள் அதிக பசியை உணர்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் உடற்பயிற்சி செய்தால், உணவுக் கோளாறுகள் பெரிய அளவில் கட்டுக்குள் இருக்கும்.
- இந்த நாட்களில் மன அழுத்தம், எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. உடற்பயிற்சி செய்தால், இந்த பிரச்சனைகளும் குணமாகும்.
மேலும் படிக்க | Low BP பிரச்சனையால் அவதியா? உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்தியங்கள் இதோ
மாதவிடாய் காலத்தில் அதிக உடற்பயிற்சி செய்வது சரியல்ல
அதிக உடற்பயிற்சி உடல் நலத்திற்கு நல்லதல்ல. இந்த காலகட்டத்தில், 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது இன்னும் பொருத்தமானது. ஏனெனில் அதிகப்படியான உடற்பயிற்சி வயிற்று வலி மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும்.
சில விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்
- மாதவிடாய் காலத்தில் தவறுதலாக கூட வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
- சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யாதீர்கள், சில மணிநேரங்களுக்குப் பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குங்கள்.
- உடலை அதிகமாக நீட்ட, அதாவது ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டாம்.
- மேலும் படிக்கட்டுகளில் ஏறுவதையும் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
- மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் 5 பேரீச்சம்பழம் போதும்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ