மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்... உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

மதுவால் பல குடும்பங்களில் நிம்மதி இழந்து அந்தக் குடும்பங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மது அருந்துவதால் உடல்நல பிரச்னை மட்டுமின்றி, மன ரீதியான பாதிப்புகள், கடன் பிரச்னை என ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்னை வந்துகொண்டே இருக்கும். அவைகளிலிருந்து விடுபட நிச்சயம் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 15, 2022, 05:06 PM IST
  • மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்
  • மதுவை கைவிடுவதால் உருவாகும் நன்மைகள்
மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்... உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? title=

மதுவால் பல குடும்பங்களில் நிம்மதி இழந்து அந்தக் குடும்பங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மது அருந்துவதால் உடல்நல பிரச்னை மட்டுமின்றி, மன ரீதியான பாதிப்புகள், கடன் பிரச்னை என ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்னை வந்துகொண்டே இருக்கும். அவைகளிலிருந்து விடுபட நிச்சயம் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

அதிகமாக மது குடிப்பவர்கள் மற்றும் மதுப் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதனால் கல்லீரலில் கொழுப்பின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உருவாகும். ஒரு மாதம் மதுப்பழக்கத்தை நிறுத்தும்போது நேர்மறையான மாற்றங்கள் உருவாக தொடங்கும். 

Drinks

அதனால் கல்லீரல் மீண்டும் இயல்பு நிலைக்கு திருபும் தொடங்கிவிடும். மதுவில் ஆல்கஹால் அளவு அதிகரிக்கும்போது இதய நோய் ஏற்படும் அபாயமும் உருவாகும். ஆல்கஹால் அதிகரிக்கும்போது டீஹைட்ரஜனேஸ்கள் எனப்படும் நொதி உருவாகுவதால்; அது கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

மது அருந்துவதை நிறுத்தும்போது நல்ல கொழுப்பு உடலில் உருவாகும். அதன் காரணமாக் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும். இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். மதுப்பழக்கத்தை தொடர்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், மார்பகம், பெருங்குடல், உணவுக்குழாய், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் ஏற்படுமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Drinks

மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும். தொடர்ந்து மது அருந்துவதை தவிர்க்கும்போது எடை குறைய தொடங்கும். 

கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய், இரத்த குழாய்கள் பாதிப்பு, இதய தசைகளில் பாதிப்பு, தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்று கோளாறு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆல்கஹால்தான் காரணம்.  எனவே மதுப்பழக்கத்தை கைவிடும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மேம்படும். 

மேலும் படிக்க | Child nutrition: குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது சைவமா அசைவமா

தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதன் காரணமாக பலவித நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே மதுப்பழக்கத்தை கைவிட்டு ஆரோக்கியமான வாழ்வோடும், மனதோடும் வாழ்வதற்கு அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | வாயு தொல்லை வயிற்றுப் பிரச்சனை நீங்க பாட்டி வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News