Corona Vaccination News: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஏப்ரல் 01 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள க்கு பதிவு செய்யலாம். இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) தனது உரையின் போது தெரிவித்தார். நாட்டில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கை மிக வேகமாக நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில், 32.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி (COVID-19) போடப்பட்டுள்ளது. பிப்ரவரியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் மாதத்தில், இது 15.54 லட்சமாக அதிகரித்தது. இது முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை, நாட்டில் 4.85 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்:
முதலில் சுகாதார ஊழியர்கள் (Health Workers) மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 16 முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 45 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் நோய் சான்றிதழுக்கு (Medical Certificates) விண்ணப்பித்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில், ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த நோய் சான்றிதழையும் கொண்டு வர வேண்டியதில்லை. அவர்கள் பதிவு செய்தால் மட்டும் போதும், நேரடியாக தடிப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ALSO READ | சென்னையில் கொரோனா அதிகரிப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்
இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு போட அதிக நாட்கள் கிடைக்கும்:
முன்னதாக, தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட 4 முதல் 6 வாரங்களுக்குள் பிறகு இரண்டாவது தடுப்பூசி எடுக்க வேண்டும் என காலம் நிர்ணியம் செய்திருந்தனர். ஆனால் மருத்துவ விஞ்ஞானிகள் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி 4 முதல் 8 வாரங்களுக்குள் செலுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இப்போது முதல் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் எட்டு வாரங்களுக்குள் மற்றொரு டோஸ் எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் ஏராளமான தடுப்பூசிகள் உள்ளன. எனவே கவலைப்படத் தேவையில்லை, உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள், தடுப்பூசி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது:
கோவிட் -19 தடுப்பூசியின் (Corona Vaccination) இரண்டாம் கட்டம் பணி நாட்டில் நடந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும், தடுப்பூசிக்கான மிகப்பெரிய தேவையும் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி போடும் வசதியை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் 24×7 நேரம் தடுப்பூசி:
ALSO READ | Sputnik V தயாரிக்கும் பெங்களூரு நிறுவனம்; COVID தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியா
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகத்தை அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போடும் மையங்களின் கூடும் கூட்டத்தினால் கவலையும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் இப்போது எந்த நாளிலும், எந்த நேரத்திலும் 24×7 கொரோனா தடுப்பூசி பெற முடியும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR