COVID-19 Updates: புதிய பாதிப்புகள் 38,073; மொத்தபாதிப்புகள் 86 லட்சத்தை எட்டியது

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியுள்ளதை அடுத்து, குணமடையும் சதவிகிதம் 92.64 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 02:19 PM IST
  • இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியுள்ளதை அடுத்து, குணமடையும் சதவிகிதம் 92.64 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 85,91,730 ஆக உள்ளது.
COVID-19 Updates: புதிய பாதிப்புகள் 38,073; மொத்தபாதிப்புகள் 86 லட்சத்தை எட்டியது title=

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியுள்ளதை அடுத்து, குணமடையும் சதவிகிதம் 92.64 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 448 ஆக உள்ள நிலையில் இறந்தவர்களின் மொத்த எணிக்கை 1,27,059 ஆக உயர்ந்தது. COVID-19 இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது.

ஆக்டிவ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பன்னிரண்டாவது நாளாக 6 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது. நாட்டில் 5,05,265 ஆக்டிவ் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் உள்ளன, இது மொத்த கொரொனா வைரஸ் தொற்று பாதிப்பில் 5.88 சதவீதம் என சுகாதார அமைச்சகத்தின் தரவு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,91,730 ஆக உள்ளது.

இந்தியாவின் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் கடந்தது. அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தை தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நவம்பர் 9 வரை மொத்தம் 11,96,15,857 பேருக்கு  கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டன.  இதில் 10,43,665 பேருக்கு திங்களன்று பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில், ஆக்டிவ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,825. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,15,892. மொத்த இறப்பு எண்ணிக்கை 11,362.

இந்தியாவில் பொதுவாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்பது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக உள்ளது. 

ALSO READ | ஒருபுறம் COVID, மறுபுறம் காற்று மாசுபாடு: இரண்டையும் சமாளிக்க எந்த mask அணிய வேண்டும் தெரியுமா…

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News