2004 ஆம் ஆண்டில் கிராமப்புற பொலிவியாவில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் ஒரு அரிய எபோலா போன்ற நோய் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் (America) நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், சப்பரே வைரஸ், எபோலா போன்ற ஒரு அரிய வகை வைரஸ் என்றும், இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸால் ஏற்பட்ட நோய் முதன்முதலில் கிராமப்புற பொலிவியாவில் 2004 இல் கண்டறியப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிலையில், சி.டி.சி ஆராய்ச்சியாளர்கள் இப்போது சப்பரே வைரஸைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இது கொரோனா வைரஸைப் போலவே மனிதகுலத்திற்கு ஆபத்தானதா என்ற திசையில் இந்த ஆய்வு சென்றுகொண்டிருக்கிறது.
சப்பரே வைரஸ் என்றால் என்ன?
சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சல் (CHHF) எபோலா காய்ச்சலை உருவாக்கும் அதே அரேனா வைரசால் ஏற்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எலிகள் (Rats) சப்பரே வைரஸின் முக்கிய கேரியர்களாகும். பாதிக்கப்பட்ட எலி, அதன் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகளுடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமும் இந்த வைரஸ் பரவுகிறது.
இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாகாணத்தின் பெயரில் இந்த வைரசுக்கு சப்பரே என்று பெயரிடப்பட்டது. சப்பரே வைரஸைப் பற்றி இன்னும் அதிகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல ஆண்டுகளாக சப்பரே வைரஸ் பொலிவியாவில் பரவிக்கொண்டிருக்கக் கூடும் என்று உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் பரவலாக நம்பப்படுகிறது.
CDC ஆராய்ச்சியாளர்கள் வைரஸ் பற்றி என்ன கண்டுபிடித்துள்ளார்கள்?
சில நாட்களுக்கு முன்பு, CDC ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதார சங்கத்தின் (ASTMH) வருடாந்திர கூட்டத்தின் போது, 2019 இல் பொலிவியாவில் சப்பரே வைரஸ் தொற்று பரவியதை ஆய்வு செய்தபோது, வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவலாம் என்பதைக் கண்டறிந்ததாகக் கூறினர்.
ALSO READ: COVID-19 தடுப்பு: நுரையீரல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 6 முக்கிய உதவிக்குறிப்புகள்
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சப்பரே வைரஸால் பாதிக்கப்படும் அதிகபட்ச அபாயம் இருப்பதால், சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
CDC ஆராய்ச்சியாளர்கள், சப்பரேவுடன் தொடர்புடைய RNA-வின் துகள்கள், பாதிக்கப்பட்ட ஒருவரின் விந்துவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சப்பரே வைரஸ் பாலியல் ரீதியாகவும் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சப்பரே வைரஸால் என்ன அச்சுறுத்தல் உள்ளது
சப்பரே வைரஸை கண்டுபிடிப்பது எளிதல்ல. உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் மட்டுமே இந்த வைரஸ் பரவுகிறது. சுவாச பாதை வழியாக இது பரவுவதில்லை என்பதால் இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ALSO READ: Good news: 30 விநாடிகளில் கொரோனாவை காலி செய்யும் mouthwash-ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR