புதுடெல்லி: COVID-19 நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்த நிலையில், தலைநகர் டெல்லி மருத்துவ நெருக்கடியில் சிக்கித் தவித்தது. ஆக்சிஜன் இல்லாமல் தலைநகர் தவிக்க, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே பீதி போன்ற சூழல் ஏற்பட்டது.
இந்த நெருக்கடியான சூழ்நிலைகளுக்குப் பிறகு மத்திய அரசிடமிருந்து புதன்கிழமை (2021, மே 5) 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
வியாழக்கிழமையன்று (2021, மே, 6) செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி முதலமைச்சர், மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
Also Read | Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது\
"முதல் முறையாக, மத்திய அரசு நேற்று (மே 5) டெல்லிக்கு 730 டன் ஆக்ஸிஜனை வழங்கியது. டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தேவைக்கும் அதிகமாக கையிருப்பு இருக்கும் வகையில் டெல்லிக்கு உயிர்காற்றை அளித்த மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால், எங்களுக்கு 730 டன் ஆக்ஸிஜன் கிடைத்தது" என்று டெல்லி மாநில முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், “ஆக்சிஜன் விநியோகத்தை குறைக்க வேண்டாம் என்று அனைவரிடமும் கைக்கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் நெருக்கடியால் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இருந்தது. எனவே, ஆக்சிஜன் இருப்புக்கு ஏற்றவாறே நோயாளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இப்போது போதுமான ஆக்சிஜன் விநியோகம் இருப்பதால், அதிக நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியும்.
Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?
"டெல்லிக்கு தினசரி 700 டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படும் என்று நம்புகிறேன். போதுமான அளவு ஆக்ஸிஜன், அதாவது தினசரி 700 டன் கிடைத்தால், டெல்லியில் 9,000-9,500 படுக்கைகளை அமைக்க முடியும். இனிமேல் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் யாரும் உயிரிழக்கமாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவல் தெரிவித்தார்.
நேற்று 730 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்கியதற்காக "டெல்லி மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக" பிரதமர் நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதினார். "டெல்லிக்கு தினமும் இதே அளவு ஆக்ஸிஜனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரதமருக்கு டெல்லி முதலமைச்சர் கோரிக்கையும் விடுத்தார்.
தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று மே 06ஆம் தேதி, 19,133 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 335 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் தற்போது 90,629 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
Also Read | தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR