தினமும் க்ரீன் டீ குடிப்பது உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடலை சுறுசுறுப்படைய செய்வதாக கூறப்படுகிறது. பொதுவாக க்ரீன் டீ உடல் எடையை குறைக்க தான் அதிகமானோர் குடித்து வருகின்றனர், ஆனால் இது உடல் எடையை குறைக்காது நிச்சயமாக உங்கள் உடலிலுள்ள ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டைப்-2 நீரிழிவு நோயானது 2045-க்குள் உலகளவில் 693 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் இதய நோய், பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக கோளாறு, உடல் ஊனம் போன்ற பல்வேறு ஆபாயங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சில மெட்டா பகுப்பாய்வு சோதனைகளின் அடிப்படையில் தினமும் க்ரீன் டீ சேர்த்துக்கொள்வது ரத்த குளுக்கோஸ் அளவில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக தெரிகிறது. க்ரீன் டீ எடுத்துக்கொள்வதால், ஃபாஸ்டிங்கில் இரத்த இன்சுலின் அல்லது HbA1c - ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சீனாவில் 2,194 நபர்களை வைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஒரு குழு 27 ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டது. கிரீன் டீ சாப்பிடுவது இரத்த குளுக்கோஸை கணிசமாகக் குறைப்பதாக சேகரிக்கப்பட்ட முடிவுகள் காட்டுகின்றன.
க்ரீன் டீ சப்ளிமென்ட் கணிசமான அளவு ஃபாஸ்டிங்க் குளுக்கோஸைக் குறைத்துள்ளது எனக் காட்டினாலும், கிளைசெமிக் கட்டுப்பாட்டில் கிரீன் டீ கூடுதல் விளைவுகளை மதிப்பிடும் நீண்ட கால சோதனைகள் தேவை என்றும் ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது. கிரீன் டீயானது கேமிலியா சினென்சிஸின் என்கிற இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது குறிப்பாக இது ஆசிய நாடுகளில் முக்கிய உணவாகவும் மற்றும் மருத்துவ உணவாகவும் கருதப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாதுக்கள் மற்றும் ஃபிளாவனாய்டு போன்ற பாலிபினால்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள சேர்மங்கள் உள்ளன. இது முக்கியமாக நீரிழிவு நோயைத் தடுப்பதில் மிகுந்த பயனை அளிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ