தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்!  

முட்டையில் அதிகளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது, ஆனால் கோடைகாலத்தில் முட்டை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.     

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2022, 06:07 AM IST
  • ஒரு நாளைக்கு 1-2 நன்கு வேகவைத்த முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • முட்டையில் எலும்புகளை உறுதிப்படுத்தும் வைட்டமின் ஏ,டி உள்ளது
  • ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புசத்துக்களும் உள்ளது.
தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்!   title=

முட்டையில் அதிகளவில் ஊட்டசத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நமது உடலின் திரவத்தை சமன்செய்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான எனர்ஜியையும் வழங்குகிறது.  முட்டை சாப்பிடுவது நல்லது என்றாலும் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக செரிமான கோளாறு ஏற்படும். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது, அதேபோல முட்டைகளையும் அளவோடு சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 1-2 நன்கு வேகவைத்த முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டையில் எலும்புகளை உறுதிப்படுத்தும் வைட்டமின் ஏ,டி உள்ளது, மேலும் இதில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புசத்துக்களும் உள்ளது.

முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது, முட்டை சாப்பிடுவது வயதாகும் போது கண்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகிறது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக அளவு லுடீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கண்புரை மற்றும் கண்களில் மாகுலர் சிதைவு போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. முட்டையில் நிரம்பியிருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது, தினமும் முட்டை சாப்பிடும்போது உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்பட்டு பணியுணர்வு கட்டுப்படும். இதனால் தேவையில்லாமல் சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பதும் கட்டுப்படுகிறது, முட்டை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது.

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

முட்டையிலுள்ள ஒமேகா -3 கள் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நமது உடலின் செல் சவ்வை உறுதிப்படுத்த உதவுகிறது. ஒமேகா 3-கள் அறிவாற்றல் குறைபாடு, டிமென்ஷியா மற்றும் நல்ல மன ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையில் அதிகளவு நன்மை கிடைக்கிறது என்பதற்காக அதனை அதிகளவில் உட்கொள்ளல் கூடாது, அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் முட்டையை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அது அஜீர கோளாறு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News