Amazing Benefits of Mango: கோடை காலத்தில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். சீசன் முழுவதும் பல்வேறு வகைகளில் மாம்பழங்கள் கிடைக்கும். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் மிகவும் சுவையாக இருக்கும். மாம்பழத்தை போன்று மாங்காயும் சுவைக்கு பெயர் பெற்றது. பொதுவாக பலர் மாங்காயை ஊறுகாய் வடிவில் உட்கொள்ள விரும்புவார்கள். மாங்காயை நாம் பல வழிகளில் பயன்படுத்தலாம். ஆம் பன்னா முதல் சட்னி வரை, மாங்காயை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் சேர்க்கலாம். இருப்பினும், மாங்காயை சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. மாங்காயில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. எனவே மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
மாங்காயின் ஆரோக்கிய நன்மைகள் | Health Benefits of Raw Mango:
1. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
மாங்காய் வைட்டமின்கள் ஏ, கே, சி மற்றும் பி6 ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவற்றில் நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவையும் நிறைந்துள்ளன.
மேலும் படிக்க | விந்தணுவில் உயிர் வாழும் கொரோனா வைரஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
2. செரிமானத்திற்கு உதவுகிறது
ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பாத்ராவின் கூற்றுப்படி, மாங்காயில் (Mango Benefits) நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மாங்காய் செரிமான அமிலங்களைத் தூண்டும் மற்றும் உணவை உடைக்க பித்த சாற்றை வெளியிடும்.
3. சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடி மற்றும் சருமத்தை மேம்படுத்த உதவும். வைட்டமின் சி கொலாஜன் உருவாவதற்கு உதவும். மறுபுறம், இரும்பு மற்றும் துத்தநாகம் உங்கள் முடியை வலுப்படுத்தும். எனவே இந்த கூற்றுகள் மாங்காயில் நிறைந்துள்ளது.
4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
மாங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள, அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
மாங்காயில் இயற்கையான சர்க்கரை நிறைந்துள்ளன. இருப்பினும், ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு பங்களிக்காது.
6. உடல் எடை
பொதுவாக, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், கட்டாயம் மாங்காயை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். காரணம், மாங்காயை சாப்பிட்டு வரும்போது, உடலின் பிஎம்ஐ அளவு குறைவாக இருப்பதும், இடுப்பு சுற்றளவும் குறைக்கும். உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுப்பதுடன், கொழுப்பையும் குறைக்க வல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயில் லாஸ் வர ... பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ