Diabetes Diet: சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும்... சில உணவுகள்

Diabetes Diet: நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரையே, அவர்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஏனெனில் இவை இரண்டின் மூலம் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2024, 09:16 AM IST
  • பெரும்பாலானோருக்கு உண்டாகும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்று, நீரிழிவு.
  • உணவுகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து உட்கொள்வதால், சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
  • உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Diabetes Diet: சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும்... சில உணவுகள்  title=

Diabetes Diet: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், பெரும்பாலானோருக்கு உண்டாகும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்று, நீரிழிவு என்னும் இரத்த சர்க்கரை நோய். நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரையே, அவர்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஏனெனில் இவை இரண்டின் மூலம் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுபடுத்தும் உண்வுகளை உட்கொள்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள் காலை உணவு முதல் இரவு உணவு வரை தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள் இருக்குமாறு கவனத்துடன் தேர்ந்தெடுத்து உட்கொள்வதால், சுகர் லெவலை (Blood Sugar Control) சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இந்நிலையில், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அத்தகைய சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில், நூற்றுக்கணக்கான நோயை குணப்படுத்தும் அருமருந்தாக கருதப்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள சில கூறுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன. இது தவிர, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல வித நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. பச்சடி அல்லது ஜூஸ் என உங்களுக்கு பிடித்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

இலவங்கப்பட்டை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவங்கப்பட்டை ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். இதில் உள்ள கூறுகள் இன்சுலினை தூண்டி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இது வளர்சிதை மாற்றத்தையும் தூன்உவதால், உடல் பருமனும் குறையும். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இதய நோய்களின் அபாயத்தையும் இது குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்க பட்டை நீர் அருந்தலாம். டீ தயாரிக்கும் போது, அதில் இலவங்கபட்டை சேர்க்கலாம்.

பாகற்காய்

பாகற்காய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. கசப்பு நிறைந்த பாகற்காயில் உள்ள சில கூறுகள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கின்றன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமின்றி இதில் உள்ள வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள லிக்னான்கள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகின்றன. மேலும் உடல் இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஏனெனில், இதனை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், உங்கள் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். 

செர்ரி பழங்கள்

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் தாரளமாக செர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது ஜிஐ மதிப்பெண் 20 மட்டுமே. வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பழமாகும். இதனை உட்கொள்வதால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

டயட்டில் சேர்க்க வேண்டிய வேறு சில உணவுகள்

பச்சை இலைக் காய்கறிகள், பச்சை வாழைப்பழம், மாதுளை, வெண்ணெய், கொய்யா, வெண்டைக்காய், கறிவேப்பிலை, முருங்கை, இளநீர், கருப்பட்டி, மற்றும் சிறுதானியங்கள்போன்றவற்றை சேர்க்கலாம். இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதோடு நோயற்ற வாழ்வை வாழலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் பானம்: குடிச்சே குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News