நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள்: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் உடல் ரீதியான பல வித பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மன அழுத்தம், தவறான உணவு, ஜங்க் ஃபுட் போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொலஸ்ட்ரால் என்ற பெயரைக் கேட்டாலே மாரடைப்பு, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பற்றிய அச்சம் மக்களிடையே தானாக வந்துவிடுகிறது. நமது உடலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது.
நல்ல கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆகையால் நல்ல கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கொலஸ்ட்ராலை அதிகரிக்க, இவற்றை உட்கொள்ளுங்கள்:
முழு தானியங்கள்:
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முழு தானியங்கள் பயனுள்ளதாக இருக்கும். புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழு தானியங்களில் காணப்படுகின்றன. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க ஓட்ஸ், கோதுமை ரவை, பிரவுன் ரைஸ் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பச்சை முட்டையை சாப்பிடுவது நல்லதா?... ஒரு பார்வை
பீன்ஸ்:
பீன்ஸ் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டின் போன்ற சத்துக்கள் பீன்ஸில் போதிய அளவில் இருப்பதால் இது உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம்.
நட்ஸ்:
முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்ற பருப்புகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் வராது.
பழங்கள்:
பழங்கள் உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகின்றன. ஆகையால், தினமும் பழங்களை உட்கொண்டால், உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ