என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா; சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும்

எடையை குறைக்க சுரைக்காய்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் கொழுப்பை வேகமாக எரிக்க இது நிச்சயமாக உதவும் என்று  ஆராய்ச்சி கூறுகிறது. இது  ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல், விரைவான கொழுப்பு குறைய நன்றாக வேலை செய்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2021, 09:29 PM IST
  • சுரைக்காய் சாற்றை ஒரு சக்திவாய்ந்த சத்துணவு ஜூஸ் என்று அழைப்பது தவறல்ல.
  • இதில் தண்ணீரில் சத்து ஏராளமாக உள்ளது.
  • 100 கிராம் காய்கறியில் சுமார் 15 கலோரிகளும், வெறும் 1 கிராம் கொழுப்பும் உள்ளன.
என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா; சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும் title=

எடையை குறைக்க சுரைக்காய்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் கொழுப்பை வேகமாக எரிக்க இது நிச்சயமாக உதவும் என்று  ஆராய்ச்சி கூறுகிறது. இது  ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல், விரைவான கொழுப்பு குறைய நன்றாக வேலை செய்கிறது. 

சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தபடாத காய்கறி சுரைக்காய் எனலாம். ஆனால்  வழக்கமான காய்கறிகளை விட அதிக  நன்மைகள் கொண்டது. உண்மையில், காய்கறி மட்டுமல்ல, அதன் சாறும் கூட அந்த கூடுதல் கொழுப்பை கரைக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

சுரைக்காய் சாற்றை ஒரு சக்திவாய்ந்த சத்துணவு ஜூஸ் என்று அழைப்பது தவறல்ல. இதில்  தண்ணீரில்  சத்து ஏராளமாக உள்ளது. எடை இழப்பு தவிர, அமிலத்தன்மை, அஜீரணம், புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க இது  மிகவும் பயனுள்ளது

சுரைக்காய் ஜூஸின் நன்மைகள் : தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்க இது மிகவும் உதவுகிறது

தண்ணீர் சத்து (சுமார் 92%) மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, உங்கள் உடலில் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. 

சுரைக்காயில் உள்ள  கலோரியை பொறுத்தவரை, 100 கிராம் காய்கறியில் சுமார் 15 கலோரிகளும், வெறும் 1 கிராம் கொழுப்பும் உள்ளன. காய்கறி முழுவதும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே நீண்ட நேரம் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியுடன்  இருக்க உதவுகிறது.செப்டம்பர் 2012 இல் ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எலிகளின் எடை யை குறைக்க சுரைக்காய் மிகவும் உதவியது, 

தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்க மிகவும் உதவுகிறது என்பதால், இதனை தொடர்ந்து குடிப்பதால், தொப்பை குறையும்.
சமையலறைகளில் அதனால், சுரைக்காயை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

ALSO READ | இரவில் பருப்பு உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்கு தான்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News