கொரோனா ஊரடங்கின் போது பலர் உடல் எடை ஏறினாலும் சிலர் தங்கள் எடையை கணிசமாக குறைத்தனர். இன்னும் சிலர் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டனர். சிலர் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு போக வேண்டும் அல்லது வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என்று எண்ணுகின்றனர். உண்மையில் இவை உடல் எடையை குறைக்க அந்த முறைகள் தேவைதான். ஆனால் அவற்றை செய்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியும் எளிய முறையில் நாம் உடல் எடையை குறைக்கலாம். அது எப்படி? இங்கே பார்ப்போம்.
1. உணவை தவிர்க்காதீர்கள்:
எடையை குறைக்க, டயட் இருக்கிறேன் என்ற பெயரில் ஒரு சிலர் உணவுகளை தவிர்ப்பர். இது, அல்சர், வயிரு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்ற பேராபத்தி கொண்டு போய் விட்டுவிடும். எனவே மூன்று வேளையும் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். உணவினை தவிர்ப்பதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரையாது. எனவே, சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையை குறைக்க முடியாது.
மேலும் படிக்க | நீருக்கு அடியில் குழந்தை பெற்று கொள்ளலாமா?அப்படி செய்தால் என்ன நடக்கும்?
2. தண்ணீர் அதிகமாக பருகுங்கள்:
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை விட சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. நாம், சமயங்களில் தாகத்தையும் பசியையும் தவறாக புரிந்து கொண்டு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது அந்த பசியை குறைக்கும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள கெட்ட நீரையும் அகற்ற தண்ணீர் உதவுகிறது. இது உடல் எடை குறைப்பிற்கு மட்டுமன்றி உடலை சுத்திகரிக்கவும் செய்கிறது.
3. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்:
உடல் எடையை குறைக்க ஆரம்பத்திலேய கடுமையான டயட் மற்றும் உடற்பயிர்சிகளை மேற்கொள்ள தேவையில்லை. கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை மட்டும் குறைவாக சாப்பிடலாம். மற்றபடி ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகவே உட்கொள்ளலாம். அதீத டயட் இருப்பது உங்கள் உடலில் எனர்ஜி இல்லாமல் செய்துவிடும்.
4. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்:
உங்கள் உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் தினசரி உணவில் காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது நொறுக்குத்தீனியை சாப்பிட வேண்டும் என மனம் எண்ணும் போது காய்கறி அல்லது பழ சேலட்டை சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கும் உதவும்.
5. தினமும் உடற்பயிற்சி:
வீட்டில் இருந்தபடியும் நாம் உடற்பயிற்சி செய்யலாம். ப்ளாங்க், கயிறு தாண்டுதல், ஜம்பிங் ஜாக்ச், ட்விஸ்ட் அண்ட் டர்ண்ட், ஸ்குவாட் போன்ற பல வீட்டு உடற்பயிற்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை செய்து உங்கள் எடையை குறைக்கலாம். முதலில் 5-10 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியை ஆரம்பித்து பின்னர் படிப்படியாக இந்த நிமிடங்களை 30 நிமிடங்கள் வரை உயர்த்திக்கொள்ளலாம். இது, உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் எடையை குறைக்கவும் உதவும், ஆனால் ஆபத்தான பயிற்சிகளை மேற்கொள்ளும் முன் கவனம் தேவை.
6. இனிப்பு பண்டங்களை தவிர்க்கவும்:
இனிப்பு நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க விரும்புவோரும் தவிர்ப்பது நல்லது. இது, உடலில் கொழுப்பை சேர்க்கும் பின்னர் நீங்கள் செய்யும் முயற்சி எல்லாம் வீணாகிவிடும். இனிப்பு பண்டங்கள், இனிபான ஜூஸ்கள், மில்க்ஷேக், கார்பனேட் பானங்கள், கேஸ் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்கள் போன்றவற்றை குடிக்க வேண்டாம். இதற்கு பதில் பழ ஸ்மூதிகள், ஃப்ரெஷ் ஜூஸ்கள் போன்றவற்றை குடிக்கலாம்.
7.இன்னும் சில...
-உங்கள் வாழ்க்கை முறையில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தினாலே உங்கள் உடல் எடையில் மாற்றத்தை காணலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகளை குறித்து வைத்து கொக்ள்ளுங்கல். உணவில் எண்ணெய் சேர்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளுங்கள்.
-மாடிப்படி ஏறுகையில் அது 2 அல்லது 3ஆவது மாடியாக இருந்தால் லிஃப்டை உபயோகிக்காமல் படியில் நடந்து செல்லுங்கள்.
-மத்தியம் அல்லது மாலையில் அதிக நேரம் தூங்குவதை தவிறுங்கள்.
-8 மணி நேர தூக்கம் அவசியம்.
மேலும் படிக்க || அடிவயிற்று கொழுப்பால் கவலையா? அப்போ இந்த ஸ்மூத்தியை தினமும் குடியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ