நம்மைச் சுற்றி எந்த ஒரு புத்திசாலி மனிதரைப் பார்த்தாலும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களையும் பாணியையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. புத்திசாலிகளிடம் பல சிறப்பு பண்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் ஆளுமையால் உலகை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள். பெரும்பாலானோர் மூளை விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அல்லது மூளைக்கான பயிற்சியில் பங்கேற்கிறார்கள் அல்லது அறிவார்ந்தவர்களாக மாறவும் ஆளுமை பண்பை வளர்த்துக் கொள்ளவும் பல புத்தகங்களைப் படிக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் அறிவார்ந்த மக்களால் சிலர் தோற்கடிக்கப்படுகிறார்கள். இதற்கு நேரடி காரணம் ஆளுமை. சிலரின் பழக்கவழக்கங்கள் அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகின்றன. புத்திசாலிகள் ஒருபோதும் கூட்டத்தோடு கூட்டமாக இருக்க மாட்டார்கள்.
அறிவாளிகளுக்கு இருக்கும் சிறப்பு பழக்கங்கள்
கற்றுக்கொள்ளும் ஆர்வம்
புத்திசாலிகளின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அவர்கள் தங்கள் அறிவுத் திறன் போதும் என நினைக்காமல், அதை வளர்த்துக் கொள்வதில் நம்பிக்கை வைப்பதுதான். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய விஷயங்களைக் கற்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் தொடர்ந்து தங்களுக்குள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
விஷயங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் திறன்
விஷயங்களின் ஆழத்தை அறிந்துகொள்ளும் ஒரு வித்தியாசமான வெறி புத்தாசாலித்தனம் உள்ளவர்களிடம் காணப்படுகிறது. அந்த விஷயத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் பெறும் வரை அவர்கள் தங்கள் தேடலை முடிக்க மாட்டார்கள். முழுமையான அறிவை பெற்ற பிறகே அவர்கள் திருப்தி அடைகிறார்கள்.
முரண்பாடுகளை ஏற்கும் பண்பு
எந்தவிதமான முரண்பாடுகள் அல்லது பிரச்சனைகளை நினைத்து அவர்கள் கவலைப்படுவதில்லை. முரண்பாடுகளை ஏற்றுக் கொண்டு, அதற்கு ஏற்ப நடக்கக்கூடிய அளவுக்கு அவர்களுக்குள் பல ஆற்றல்கள் உள்ளன. அதே சமயம், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்களைப் புகழ்வதிலும் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
புத்தாலிகள் தங்கள் தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள். அவர்கள் தவறு செய்தால், அவர்கள் தங்கள் தவறை எந்த தயக்கமும் இல்லாமல், சால்ஜாப்புகள் ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். தங்கள் தவறை ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டார்கள் அல்லது வெட்கப்பட மாட்டார்கள்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ