கொழுப்பை குறைத்து புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க சீனாவில் காளான்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
ஆம் விட்டமின் விட்டமின் டி அதிகம் பெற்ற காளான்கள், நூறாண்டுகளுக்கு முன் மருத்துவத்துக்காக சீனாவில் பயனபடுத்தத் தொடங்கப்பட்டது என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
காளான்களில் உள்ள பைபர்கள் கொழுப்பைக் குறைக்க உதவும், கொழுப்பை குறைக்கும் காளாண்களை பெண்கள் எடுத்துக் கொண்டால் மார்பகக் புற்று நோய வராமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
அதேவேளையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் காளான்கள் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால், கொழுப்புச் சத்து என எதுவும் இல்லாததால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது என கூறப்படுகிறது.
சமீபகாலமாக காளான் வகைகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கி விட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் தருவதால் தான். மேலும் வைட்டமின் சி, வைட்டமின் டிஇ கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துக்களும் நிறம்ப கொண்டிருப்பதால்.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. காளான் ரகங்கள் நம் நாட்டின் கால நிலைக்கு உகந்தது. காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது.
மழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினமாக கருதப்படும் காளான் பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை. பொதுவாக, விஷக்காளான்கள் பல வண்ணங்களில் காணப்படும். துர்நாற்றம் வீசக்கூடியவையாகவையும் இருக்கும். உண்ணத் தகுந்த விஷமற்ற காளான்கள், சுவையுள்ளவை. அதிகச் சத்துகள் நிறைந்த. அதோடு, நிறைய மருத்துவப் பயன்கள் கொண்டவை. பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் இவை பலதரப்பட்ட சூழல்களில் வளருபவை. முற்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது காளான். இப்போது பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.