Omicron தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேதம் அளிக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்

கொரோனாவின் பழைய வகை டெல்டா வைரஸுக்குப் பிறகு வந்த ஓமிக்ரான் மாறுபாடு இப்போது நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 02:06 PM IST
  • ஆயுஷ் அமைச்சகம் மக்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத வைத்தியம் உதவியாக இருக்கும்.
  • ஆயுஷின் பல்வேறு மருத்துவ முறைமைகளை பின்பற்றுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Omicron தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேதம் அளிக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள் title=

ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ள ஆயுர்வேத குறிப்புகள்: தற்போது தொடங்கியுள்ள கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக, மக்கள் மத்தியில் மீண்டும் கவலை அதிகரித்து உள்ளது. கொரோனாவின் பழைய வகை டெல்டா வைரஸுக்குப் பிறகு வந்த ஓமிக்ரான் மாறுபாடு இப்போது நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது. 

இந்த நிலையில் மக்களின் ஆரோக்கியத்திற்காக ஒட்டுமொத்த வழிகாட்டுதல்களை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. தொற்றுநோய்களின் இந்த காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யவும், கொரோனா (Coronavirus) தொற்றுநோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில், ஆயுஷ் அமைச்சகம் மக்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. தொற்றுநோயிலிருந்து காத்துக்கொள்ள ஆயுஷின் பல்வேறு முறைமைகளை பின்பற்றுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இருப்பினும், இந்த கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கோவிட்-19 பொருத்தமான நடத்தையின் கீழ் வரும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு அளித்துள்ள அனைத்து அறிவுறுத்தல்களுடன் இவற்றையும் சேர்த்து கடைபிடிக்கலாம் என்ரும், இவை எதற்கும் மாற்று அல்ல என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. முகக்கவசங்களின் பயன்பாடு, சரியான கை சுகாதாரம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கோவிட் தடுப்பூசி, ஆரோக்கியமான உணவு, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற சுகாதாரம் தொடர்பான விதிகளைப் பின்பற்றவும் ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்

பொதுவான தீர்வுகள்

- நாள் முழுவதும் பல முறை சூடான நீரை குடிக்கவும்
- ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது யோகா (Yoga), பிராணாயாமம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். 
- மஞ்சள், சீரகம், மல்லி விதை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
- சமையலில் அடிக்கடி பூண்டைப் பயன்படுத்த வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத வைத்தியம்:

- காலை வேளையில் 10 கிராம் சவன்பிராஷ் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை இல்லாத சவன்பிராஷ் சாப்பிட வேண்டும்.
- துளசி மற்றும் இலவங்கப்பட்டையால் செய்யப்பட்ட மூலிகை டீ/டிகாக்ஷனை கண்டிப்பாக குடிக்கவும்.
- இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
- வெல்லம், நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை உட்கொள்ளவதும் பலன் தரும். 
- கோல்டன் மில்க்: 150 மில்லி சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும்.

எளிய ஆயுர்வேத செயல்முறைகள்

- நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை காலையிலும் மாலையிலும் நாசியில் தடவவும்.
- ஆயில் புல்லிங் (Oil Pulling) தெரபி: 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் வாயில் எடுத்துக் கொள்ளவும். அதை குடிக்க வேண்டாம். 2 முதல் 3 நிமிடங்கள் வாயில் வைத்து சுழற்றி வெளியே துப்பிவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரால் வாயை கொபளிக்கவும். 
- இதை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் ஏற்பட்டால் இதை செய்யலாம்: 

- புதிய புதினா இலைகள் அல்லது ஓமம் மற்றும் இஞ்சியை போட்டு சூடான நீரில் வேவு பிடிக்கவும்.
- 2-3 கிராம்பு பொடியை வெல்லம் அல்லது தேனுடன் கலந்து உட்கொள்ளவும். 

ALSO READ | Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News