தெலுங்கானா மனிதனின் வயிற்றில் உருளைக்கிழங்கு சைஸ் சிறுநீரக கல் அகற்றம்...

தெலங்கானா மாநிலத்தில் ஒருவரின் வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலான சிறுநீரக கல் அகற்றம்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 11:49 AM IST
தெலுங்கானா மனிதனின் வயிற்றில் உருளைக்கிழங்கு சைஸ் சிறுநீரக கல் அகற்றம்... title=

தெலங்கானா மாநிலத்தில் ஒருவரின் வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலான சிறுநீரக கல் அகற்றம்...! 

தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 15 நாள்களாகக் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள KIMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், இடது புற சிறுநீரகத்தில் சுமார் 8 செ.மீ அளவில் ( உருளைக்கிழங்கு சைஸில்) சிறுநீரக் கல் இருப்பதைக் கண்டறிந்தனர். 

இந்த கல்லை மாத்திரைகள் மூலமாக, சுமார் 18 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே குறைக்க முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுநீரக கல்லை அகற்ற முடிவுசெய்துள்ளனர்.

இதையடுத்து, சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் Neil N. திரிவேதி தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவைசிகிச்சை மூலம் அந்த சிறுநீரகக் கல்லை அகற்றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், `இவ்வளவு பெரிய கல் இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், நோயாளிக்கு அப்படியான பாதிப்புகள் அதிர்ஷடவசமாக ஏற்படவில்லை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தற்போது நோயாளி நலமுடன் உள்ளார்'' என தெரிவித்துள்ளனர். 

 

Trending News