கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உடல் சோர்வு அதிகமாகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட காரணம் என்ன? அதிலிருந்து விடுபட வழி என்ன? தெரிந்துக் கொள்வோம்.
அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது.
தூக்கம் உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல், இரவில் நேரம் கழித்து உறங்குவதும், கணினி மற்றும் கைபேசியில் அதிக நேரத்தைக் கழிப்பதும் கண்ணுக்கு கீழ் கருவளையத்தை ஏற்படுத்துகிறது.
தினசரி 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை அதிகமாக கசக்குவதால் கண்களுக்குக் கீழ் உள்ள மிகவும் மெல்லிய தோல் சோர்வாகி கருப்பு நிறத்திற்கு மாறுகிறது.
சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கும் வரலாம். சிலருக்கு சத்துக்குறைவினால் கண்களில் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கான தீர்வாக இருக்கும்.
Also Read | அடடா, சாமையில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே!
முகத்தில் பலவிதமான முகப்பூச்சுக்களை உபயோகிக்கின்றனர். இதனால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையும் கண்களுக்கு அடியில் கரு வளையமாக மாறுகிறது.
அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைவதாலும் கருவளையம் ஏற்படுகிறது.
இவைதான் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதற்கான காரணம். வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.
ஒரு உருளைக்கிழங்கை அரைத்து, கண்களைச்சுற்றி பூசி வந்தால், கருவளையம் மறையும்.கண்களை குளிர்விக்கும் வகையில், கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி, வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.
இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும். நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்யும் கொடுத்தால், கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
Also Read | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR