மழைக்காலங்களில் ஏற்படும் வாய்ப்புண் - வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு

வழக்கமான நாட்களைக் காட்டிலும் மழைக்காலங்களில் அதிகளவு வாய்ப்புண்கள் ஏற்படும். இதனை வீட்டு மருத்துவம் மூலம் எளிமையாக குணமாக்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2022, 08:14 PM IST
  • வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்
  • வீட்டு மருத்துவத்தின் மூலம் எளிமையாக குணமாக்கலாம்
மழைக்காலங்களில் ஏற்படும் வாய்ப்புண் - வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு  title=

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால், ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பாங்கு தான் அனைவருக்கும் இருக்கும். வாய்ப்புண்களிலும் சில வகைகள் இருக்கிறது. வாய் பகுதியின் ஓரத்தில் புண்கள் வருவது, கீழ் மற்றும் மேல உதடுகளின் மேல் மற்றும் உள்புறத்தில் புண் வருவது என பல விதங்கள் உண்டு. சில சமயங்களில் இந்த வாய்ப்புண்கள் லேசான வலியுடன் வரும். இவை சரியாக ஒரு சில வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளும். அப்படியான சூழலில் நீங்கள் மாத்திரைகள் எடுக்காமல் வீட்டு மருத்துவம் மூலம் குணமாக்க முயற்சி எடுக்கலாம்.

மணத்தக்காளி கீரை

பொதுவாக குடல் புண்கள் இருந்தால் மணத்தக்காளி சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. நாட்டு வைத்தியத்திலும் இதை பெரிதாக பரிந்துரைப்பார்கள். வாய்ப்புண் ஏற்பட்டவர்கள் தினமும் மணத்தக்காளி சாறை புண் மீது படும்படி வாயில் சிறிது நேரம் வைத்தால், ஒரு சில நாட்களில் குணமாகிவிடும். 

தேன் 

தேனில் பொதுவாக வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இவை உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. வாய்ப் புண் இருக்கும்போது, அந்த இடத்தில் சிறிது தேன் தடவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் வாய்ப்புண் ஆறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

மேலும் படிக்க | சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

துளசி 

பெரும் மருத்துவக் குணங்களைக் கொண்ட துளசி, வாய்ப்புண்களுக்கும் நல்ல அருமருந்து.  ஆயுர்வேதத்தில் நிறைய தெரபி சிகிச்சைகளுக்கு துளசி தான் மூலமாக இருக்கிறது. இவற்றில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட பண்புகள், புண்களை குணமாக்க வெகுவாக உதவுகின்றன.  இது தவிர தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால், மஞ்சள் தூள் ஆகியவற்றின் வழியாகவும் வாய்ப்புண்களுக்கு நீங்கள் நிவாரணம் தேடிக் கொள்ள முடியும். 

மேலும் படிக்க | தேடி வரும் நோயை விரட்டியடிக்கும் 3 உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News