Shocking News! விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்

நாட்டில் ரெமிடிகிவிர் ஊசி போடுவதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் திடுக்கிடும் செய்தி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 13, 2021, 05:35 PM IST
  • 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படுமா?
  • கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையில், இது சாத்தியமா?
  • மத்திய அரசு என்ன முடிவெடுக்கும்?
Shocking News! விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும் title=

Remdesivir Injection: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெமாடெசிவிர் ஊசியில் (Remdesivir Injection) பெருமளவு வீணாகிவிடுமோ என்ற அச்சங்கள் எழுந்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்துக்கு நாட்டில் பற்றாக்குறை நிலவும் நிலையில் இந்த செய்தி உலக அளவில் பேசுபொருளாகிவிட்டது.

பல நிறுவனங்கள் ஏற்றுமதி NOCயின் கீழ் Remdesivir Injectionஇன் மிகப் பெரிய அளவிலான சரக்கை தயாரித்து வைத்திருக்கின்றன. இப்போது அதன் ஏற்றுமதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. இதனால், இந்த சரக்குகளை நாட்டை விட்டு வெளியில் அனுப்பவும் முடியாது, உள்நாட்டு சந்தையிலும் விற்க முடியாது. நாட்டில் ரெமிடிஸ்விர் ஊசி போடுவதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரச்சனையில் அரசாங்கம் தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேக்கேஜிங்கை மாற்றி விநியோகிக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன

ஆதாரங்களின்படி, ரெமிடிஸ்வீர் (Remdesivir Injection) ஏற்றுமதி செய்வதற்கான தடை காரணமாக, ஏற்றுமதி NOCயின் கீழ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சரக்குகள் அழிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அரசாங்கம் விதிமுறைகளை மாற்றாவிட்டால், சுமார் 3 லட்சம் ஊசி மருந்துகள் அழிக்கப்படும். ஏற்றுமதி என்ஓசியின் கீழ் தயாரிக்கப்பட்ட சரக்குகளை உள்நாட்டு சந்தையில் விற்க முடியாது என்பது விதி என்பதால் இந்த சிக்கல் எழுந்துள்ளது.  

Also Read | கொரோனாவின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் இவற்றைப் பற்றித் தெரியுமா?

உரிம விதிமுறைகள் கண்டிப்பானவை

ஆதாரங்களின்படி, அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், பேக்கேஜிங்கை மட்டும் மாற்றி உள்நாட்டு சந்தையில் ரெமிடிகிவிர் தடுப்பூசியை விற்க முடியும், இது தடுப்பூசி பற்றாக்குறையையும் சீர் செய்யும் நடவடிக்கையாக இருக்கும் என நிறுவனங்கள் கூறுகின்றன. 

உரிம விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட சரக்கின் ஏற்றுமதியை ரத்து செய்தால், என்ஓசியின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அழிக்கப்பட வேண்டியிருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உலக வர்த்தக அமைப்பு WTOவின் காப்புரிமை விதிகளின் வரம்புக்கு வெளியே உள்ள நாடுகளுக்கானவை.   

Remdesivir Injection தயாரிப்பில் சிக்கல்கள் ஏன்?

தகவல்களின்படி, ஜனவரி மாதத்தில் Remdesivir Injectionஇன் தேவை குறைவாக இருந்ததால் உற்பத்தி குறைக்கப்பட்டது. தொழிற்சாலையிலிருந்து சரக்கு சந்தைக்கு வருவதற்கு 3 வாரங்கள் ஆகும். அதே நேரத்தில், மருந்தின் தூளில் இருந்து தடுப்பூசி தயாரிக்க சுமார் 72 மணி நேரம் ஆகும். பாக்டீரியா, ஆல்கா, பூஞ்சை, புரோட்டோசோவா சம்பந்தப்பட்ட சோதனைகள் 15ஆம் நாள் செய்யப்படுகின்றன. இதற்குப் பிறகு, தொழிற்சாலையிலிருந்து விநியோகத்திற்கு வர 3-4 நாட்கள் ஆகும்.

Also Read | ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips

அரசு தலையிடலாம்

உள்நாட்டு சந்தையில் Remdesivir Injectionஇன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிடும் என்று நம்பப்படுகிறது. ஏற்றுமதிக்காக பிரத்யேகமாக ரெமிடிஸ்வீரை உருவாக்க சுங்கக் கட்டணம் இல்லாத இலவச இறக்குமதி அங்கீகார விதிகளின் கீழ் மூலப்பொருள் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்பட முடியாது. 

இந்த விவகாரம் நிதி அமைச்சகம் (Ministry of Finance) மற்றும் வர்த்தக அமைச்சகம் (Ministry of Commerce) சம்பந்தப்பட்டது எனவே இந்த இரண்டு அமைச்சகங்களும்
இந்த விஷயத்தில் தலையிட வேண்டியிருக்கும். 

இத்தகைய சூழ்நிலையில், இன்றைக்கு மிகவும் அத்தியாவசியமான தேவைக்கான மருந்து வீணாகாமல் பயன்படுத்தப்பட வேண்டுமானால், விதிமுறைகளை தளர்த்தும் முடிவு மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது.

Also Read | வைரலாகும் Anushka Sharmaவின் மனம் மயக்கும் மாயப் புன்னகை புகைப்படம்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News