தேநீர் பக்க விளைவுகள்: டீ பிரியர்களுக்கு இந்த செய்தி மிகவும் முக்கியம். நாள் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு கப் தேநீருக்கும் அதிகமாக குடிப்பது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளுக்கு மேல் குடிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். முதலில் உங்களுக்கு வயிற்றெரிச்சல் பிரச்சனை ஏற்படலாம்.
அதிக டீ குடிப்பதால், பசி எடுக்காது. அதுமட்டுமின்றி, உங்களுக்கு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே, அதிக அளவில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக டீ குடிப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம்.
ரத்த சோகை அல்லது அனீமியா
டீ அதிக அளவில் குடித்தால் ரத்த சோகை ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிலுள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், இவ்வாறு கூறுகின்றனர். மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
பதற்றம் அமைதியின்மை ஏற்படும்
அதிகமாக டீ குடிப்பது கவலையை அதிகரிக்கும். தேநீரிலும் காஃபின் உள்ளது. அதிகப்படியான காபின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த பழக்கத்தை படிப்படியாக மாற்ற வேண்டும். மேலும் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, நிலையில்லாமல் மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருப்பது போன்ற பிரச்சனைகள் எழலாம்.
அதிகமாக டீ குடிப்பது குடலுக்கும் நல்லதல்ல
அதிகமாக தேநீர் குடிப்பது குடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் குடலை சேதப்படுத்தும். இது உணவை ஜீரணிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நெஞ்சு எரிச்சல் பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது.
தூக்கமின்மை
அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும். போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நீங்கள் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அத்தகைய நிலையைத் தவிர்க்க, டீ குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு நாளைக்கு 2 கப் தேநீர் போதும் என்று பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR