ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் ஏராளம். அதில் ஒன்று புற்றுநோய். மேலும், புகை பிடிப்பதால் நுரையீரல் பலவீனமாகி, மூச்சு திண்றல், மூச்சு வாங்குதல், ஆகியவை ஏற்படும். அதோடு, அடிக்கடி இருமல் ஏற்படும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு. அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம். புகை பிடிப்பதால், கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.
இந்நிலையில், பல ஆராய்ச்சிகளில் புகைப்பிடிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை வைட்டமின் சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டால், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது. நிகோடினுடன் குறிப்பிட்ட வைட்டமின் கலப்பதன் காரணமாக நுரையீரல் புற்று நோய் ஆபத்து அதிகரிப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலானோர், வைட்டமின்கள் பற்றாக்குறையை ஈடுசெய்ய சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். பொதுவாகவே, மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. வைட்டமின் அல்லது கனிம சத்துக்களை பெற மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இயற்கையான முறையில் உணவில் இருந்து பெறுவது நல்லது. புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளில் வைட்டமின்களின் பங்கு குறித்து நடத்தப்பட்ட அத்தகைய ஆராய்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
புகைப்பிடிப்பவர்கள் பீட்டா கரோட்டின் சப்ளிமெண்ட்ஸ் அதாவது வைட்டமின் ஏ மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், நுரையீரல் புற்றுநோய்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அமெரிக்காவில் நோய் தடுப்பு சேவைகள் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பீட்டா கரோட்டின் என்பது, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிறத்தை அளிக்கிறது என்றும், உடலில் நுழையும் போது அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. ஆனால் அதை ஒரு சப்ளிமெண்டாக எடுத்துக் கொண்டால் அதன் ஆபத்துகள் அதிகம்.
ஆராய்ச்சி தொடர்பாக 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், புகையிலை அல்லது புகைப்பிடிப்பவர்கள், பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வ்து நுரையீரல் புற்றுநோயக்கான வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கிறது என்று அமெரிக்க நோய் தடுப்பு சேவைகள் பணிக்குழு தெரிவித்துள்ளது.
நிகோடின் மற்றும் புகையிலை ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகைப்பிடிப்பவர்களில் பீட்டா கரோட்டின் கூடுதல் நிகோடினுடன் இணைந்தால் நுரையீரலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற ஆய்வு தென்மேற்கு பின்லாந்திலும் நடத்தப்பட்டது. அதிலும், வைட்டமின் ஏ நிகோடினுடன் சேர்ந்து நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பவர்களைச் சுற்றி இருப்பவர்களும் வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டால் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ