புதுடெல்லி: தொண்டை வலி உள்ளதா? 6 வகையான தேநீர் இருக்கும்போது கவலையே தேவையில்லை. ஜலதோஷத்தில் இருந்து குணமடைய நிரந்தர மருந்து இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இயற்கையாகவே கிடைக்கும் பானமான தேநீர் மூலம் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் இருக்கலாம்!
ஜலதோஷம் மற்றும் தொண்டை வலி
ஜலதோஷம் மற்றும் தொண்டை வலி எப்போதும் எரிச்சலூட்டும் என்பதோடு வலிமிகுந்தவை. நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் இவை உலகில் மிகவும் பொதுவான நோய்.
மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் சூடா டீ குடிக்கும் பழக்கம் உண்டா? ஜாக்கிரதை
பொதுவானதாக இருந்தாலும் இந்த அசௌகரியத்தை குறைக்க எந்த மருந்தும் இல்லை என்பதே கசப்பான உண்மை. சளியும் ஜலதோஷமும் தொண்டையில் புண்ணையும் ஏற்படுத்தி உணவு உண்பதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
ஜலதோஷத்தில் இருந்து குணமடைய நிரந்தர மருந்து இல்லாமல் இருக்கலாம், ஆனால் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் உள்ளன.
தேநீர் ஒன்றே தொண்டை கமறலுக்கும் புண்ணுக்கும் அற்புதமான தீர்வாக இருக்கும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை! சில வகை தேநீர்கள், இந்த நோய்களில் இருந்து குணமடைய உதவுவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியில் நீண்டகால தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
இஞ்சித் தேநீர்
இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக குடித்தால் தொண்டை கரகரப்பு மற்றும் வலி நீங்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, காரமான இஞ்சி தேநீர் தொண்டை வீக்கத்திற்கு ஒரு இயற்கை தீர்வாகும்.
மேலும் படிக்க | நிம்மதியா தூங்கணுமா: இரவில் இந்த டீ குடிச்சா போதும்
பெப்பர்மிண்ட் தேநீர்
பெப்பர்மிண்ட் (Peppermint )தேநீர் தொண்டை புண் வலியை ஆற்ற உதவும். இதில் மெந்தோல் என்ற கலவை உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
அதிமதுரம் சேர்த்த மூலிகை தேநீர்
அதிமதுரம் (Licorice) சேர்த்து தயாரிக்கப்பட்ட தேநீர், ஆரோக்கியப் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது வயிற்று வலி மற்றும் உஷ்ணத்தைக் குறைக்க உதவுகிறது, இது பாக்டீரியா எதிர்ப்பியாக செயல்படும். தொண்டை புண்களுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.
பால் சேர்க்காத தேநீர், பால் சேர்த்த தேநீர், மூலிகை தேநீர், க்ரீன் டீ என பல்வேறு தேநீர் வகைகளும் பலராலும் விரும்பிக் குடிக்கப்படுகிறது. அதிலும் பொதுவாக கருப்பு தேநீர் குடிப்பவர்களுக்கு தொண்டைப் புண்கள் விரைவில் குணமாகிவிடுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Healthy Tea: நானே தேநீர்களின் ராணி: போட்டியில் களம் இறங்கும் ஐஸ் டீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe