Cholesterol Symptoms: சமீப காலங்களில் உலக மக்களை வாட்டி வதைக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம், உடல் பருமன் ஆகியவை குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாக உள்ளன. ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலர் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது:
- HDL Cholesterol: எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால்
- LDL Cholesterol: எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால்
கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகரிக்கும் பொழுது பலவித தீவிர நோய்களுக்கு அது நுழைவாயிலாக அமைந்து விடுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சனைகள் ஆகியவை ஏற்படக்கூடும்.
குறிப்பாக குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் இந்த காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாவது மிகவும் இயல்பானது. எனினும் குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இவற்றை புரிந்து கொள்வதும் சற்று கடினம். ஏனெனில் இவை குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான அறிகுறிகளை போலவே தென்படும். குளிர்காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கொலஸ்ட்ரால் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கை, கால்களில் குளிர்ச்சியான உணர்வு
கைகளும் கால்களும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே இருந்தால் அது உயர் கொலஸ்ட்ரால் அளவுக்கான அறிகுறியாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும் பொழுது இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது. இது கை, கால்களில் குளிர்ச்சியான உணர்வை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளையில் ரத்த உறவை ஏற்படுத்தும்... ஆபத்தான சில பழக்கங்கள்
அதிகமான சோர்வு
இரவு பொழுது அதிகமாகவும் பகல் பொழுது குறைவாகவும் இருக்கும் குளிர் காலத்தில் சோர்வு அதிகமாக இருந்தால் அதையும் கொலஸ்ட்ராலின் அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது. இந்த அழுத்தம் காரணமாக உடலில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது அதிக சோர்வு ஏற்பட காரணமாகின்றது.
மூச்சு விடுவதில் சிரமம்
மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல், மிகவும் கஷ்டப்பட்டு சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவை இருந்தால் அதை கெட்ட கொழுப்புகாண அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் மூலம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கான இரத்த விநியோகம் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நடக்கின்றது.
மார்பில் அழுத்தம்
மார்பு பகுதியில் ஏற்படும் வலி பெரும்பாலும் இதய பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது. குளிர்காலத்தில் குளிர்ச்சியான வெப்பநிலையால் உடல் அழுத்தமாக இருக்கும் பொழுது உடலில் அதிகரிக்கும் கொழுப்பு இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குளிர் காற்று மார்பில் அசோகர்யத்தை அதிகரிக்கும்.
கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது ஏற்படும் பிற அறிகுறிகள்
- கண் இமைகளில் மஞ்சள் கட்டிகள்
- கார்னியாவை சுற்றி மெல்லிய வெள்ளை கோடு
- கைகள் மற்றும் கால்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
- தொடைகளில் தசை பிடிப்பு
- உள்ளங்கால்களில் குளிர்ச்சியான உணர்வு
- கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்களுக்கு கீழே உருவாகும் தழும்பு... அச்சப்பட வேண்டாம் - ஈஸியாக சரி செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ