பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது மிக அவசியம். மேலும், பழங்களை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். இல்லை என்றால் அதன், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது. பப்பாளி, அன்னாசிப் பழம், தர்பூசணி போன்ற சில பழங்களை தோல் நீக்கித் தான் சாப்பிட வேண்டும். ஆனால் சில பழங்களை தோல் நீக்காமல் சாப்பிட முடியும். சில பழங்களில் தோல்கள் ஊட்டச்சத்தின் பொக்கிஷமாக உள்ளது. எனவே, அதனை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால், முழுமையான ஊட்டச்சத்தினை பெறலாம்.
ஆப்பிள் (Apple)
ஆப்பிள் தோலில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன., இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆப்பிள் கிட்டத்தட்ட அனைத்து வகையான நோய் பாதிப்பிலும் மிகவும் பாதுப்பான சாப்பிடக் கூடியது. பலர் ஆப்பிளை தோலுரித்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல. ஆப்பிள் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிள் தோல் இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
பேரிக்காய் (Pear)
பேரிக்காய் தோலிலும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பேரிக்காய் தோலை நீக்கி சாப்பிடுவதால் அதன் சத்துக்களை முழுமையாக பெற முடியாமல் போகலாம். பேரிக்காய் தோலில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பேரிக்காய் தோல் இதயத்திற்கு நன்மை பயக்கும். பேரிக்காய் தோலில் நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன, எனவே நாம் எப்போதும் பேரிக்காய் தோலுடன் சாப்பிட வேண்டும்.
சப்போட்டா (Sapota)
பெரும்பாலானோர் சப்போட்டாவை தோலுரித்து சாப்பிடவே விரும்புவார்கள். சப்போட்டா தோல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்த பழத்தின் தோலில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. சப்போட்டா தோல்கள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். சப்போட்டா தோல் பொட்டாசியம், இரும்பு, ஃபோலேட் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலத்தின் முக்கிய ஆதாரமாகும். இதனால், சப்போடா தோல் பல நோய்களுக்கு தீர்வாக அமையும்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்
கிவி (Kiwi)
கிவி மிகவும் ஆரோக்கியமான பழம். இதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். கிவி தோலில் வைட்டமின் சி உள்ளது. கிவியின் தோல் சிறிது கடினமாக இருக்கும். இதன் காரணமாக பலர் அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள். வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்கள் அதன் தோலில் நிறைந்து உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீச் என்னும் குழிப்பேரி (Peach)
பீச் என்னும் குழிப்பேரி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தோற்றத்தில் ஆப்பிள் போன்று காட்சியளிக்கும் குழிப்பேரி பழத்தின் தோலில் பல ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளன. பீச் தோலில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். சருமம், இதயம் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் பழமாக குழிப்பேரி பழம் உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் பருமனால் ஆண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ