Weight Loss Tips: இந்த நவீன உலகில் அவசர கதியில் வாழ்க்கை செல்கிறது. நாம் அனைவரும் எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருக்கிறோம். அனைத்திலும் அவசரம். வேகமாக வேலை செய்வது, வேகமாக சாப்பிடுவது, வேகமாக சமைப்பது என எல்லாம் வேகமாக நடக்கும் இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் எடையும் தொப்பை கொழுப்பும் கூட வேகமாக அதிகரித்து விடுகின்றன. ஆனால் இவற்றை குறைப்பது அத்தனை சுலபமல்ல.
உடல் பருமன், தொப்பை கொழுப்பு (Belly Fat) ஆகியவற்றால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தொப்பையை குறைக்க, சரியான உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என இவை அனைத்தும் மிக முக்கியம். கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவில் குறைந்த கலோரி உணவுகளைச் சேர்ப்பது தொப்பையை எளிதில் குறைக்க உதவும். சில இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இதில் சில பழங்கள் நமக்கு மிகவும் உதவும். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் (Apple)
ஆப்பிள் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள ஒரு பழமாகும். இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கின்றது.
திராட்சை (Grapes)
திராட்சை பழங்கள் இன்சுலின் அளவைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும். சிவப்பு மற்றும் கருப்பு திராட்சைகளில் எலாஜிக் அமிலம் உள்ளது. திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல், அந்தோசயனின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடல் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. எடை இழப்பு முயற்சியில் உள்ளவர்கள் தினமும் திராட்சை சாப்பிடலாம்.
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்
தர்பூசணி (Watermelon)
தர்பூசணியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அன்னாசிப்பழம் (Pineapple)
அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலைன் உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இதில் உள்ள பண்புகள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உடல் எடையைக் குறைக்க பங்களிப்பதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
அவகேடோ (Avocado)
அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இவை பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
கிவி (Kiwi)
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை செரிமானத்தை சீராக்க உதவுகின்றன. கிவி பழம் எடை இழப்பில் உதவுவதோடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
பெர்ரி (Berry)
அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி வகை பழங்களில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளன. இவற்றில் அதிக அளவில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. பெர்ரி வகை வகை பழங்கள் நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளின் நல்ல மூலமாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவை தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் பெர்ரிகளில் சிலவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும் மேஜிக் மூலிகைகள்: இப்படி சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ