வைட்டமின் B3 குறைபாடு என்பது அறிவாற்றலை பாதித்து, மனச்சோர்வு மற்றும் பிற மனநல கோளாறுகள் போன்ற கடுமையான உடல்நல விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. நியாசின் அல்லது வைட்டமின் பி3 மனித ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. ஏனெனில் இது ஒரு கோஎன்சைம் ஆகும். உண்மையில், 400 என்சைம்கள் அவற்றின் உகந்த செயல்பாட்டிற்கு அதைச் சார்ந்துள்ளது. எனவே, வைட்டமின் பி 3 குறைபாட்டிற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வதும், அதன் அறிகுறிகளைக் கவனிப்பது மற்றும் சில பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும் முக்கியம்.
வைட்டமின் B3 குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் பி3 நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின் அல்லது நிகோடினிக் அமிலம் வைட்டமின் பி ஊட்டசத்தின் அறியப்பட்ட 8 வகைகளில் ஒன்றாகும். வைட்டமின் பி 3 குறைபாடு அல்லது நியாசின் குறைபாடு உடலில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச முடியாதபோது அல்லது போதுமான அளவு கிடைக்காத போது ஏற்படுகிறது.
வைட்டமின் B3 ஊட்டசத்தின் சில செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!
நியாசின் அல்லது நிகோடினிக் அமிலம் நரம்பு மண்டலத்தை சரியாக வேலை செய்ய உதவுகிறது
மேலும்,பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் மற்றும் மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவுகிறது
மேலும், இது கொழுப்புகள் மற்றும் புரதங்களை உடைக்க உதவுகிறது. வைட்டமின் B3 கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது
மேலும் படிக்க | Uric Acid அதிகரித்தால் அவதிதான்!! இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்
வைட்டமின் பி3 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
வைட்டமின் பி 3 குறைபாடு அறிகுறிகள்
தோல் சூரிய ஒளியில் வெளிப்படும் போது ஒரு நிறமி சொறி தோன்றும்
அக்கறையின்மை அல்லது சோர்வு
சிவப்பு நாக்கு
மலச்சிக்கல்
பசியின்மை
மனச்சோர்வு
வயிற்றுப்போக்கு
பிரமைகள்
தலைவலி
நினைவாற்றல் இழப்பு
வாய் புண்கள்
தோலின் கடினமான தோற்றம்
நாக்கு வீக்கம்
வாந்தி
விட்டமின் பி3 நிறைந்த சில உணவுகள்:
சிவப்பு இறைச்சி: மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
சிக்கன்
மீன்
பழுப்பு அரிசி
தானியங்கள் மற்றும் ரொட்டிகள்.
நட்ஸ், விதைகள்
பருப்பு வகைகள்
வாழைப்பழங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ