Weight Loss: கொத்தமல்லி பானத்தை குடித்தால், கொழுப்பு ஓடியே போய்விடும்

Coriander for Weight Loss: தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ளது. ஆகையால், உடல் எடை இழக்க, உணவை சரியாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2022, 11:49 AM IST
  • தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ளது.
  • உடல் எடையை குறைக்கும் கொத்தமல்லி நீர்.
  • சுகாதார நிபுணர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் கொத்தமல்லியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
Weight Loss: கொத்தமல்லி பானத்தை குடித்தால், கொழுப்பு ஓடியே போய்விடும் title=

உடல் எடையை குறைக்கும் கொத்தமல்லி நீர்: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடல் எடையை குறைகக் முயற்சி செய்து, ஆனால், உணவைக் கட்டுப்படுத்தும் மனநிலை இல்லை என்றால், விரும்பிய பலன் கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான். 

தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ளது. ஆகையால், உடல் எடை இழக்க, உணவை சரியாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். ஒரு சிறப்பு வகையான பானம் எடை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கொத்தமல்லி இலைகள் தொப்பையை குறைக்கும்

கொத்தமல்லி இலைகள் உடல் ஆரோக்கியத்துக்கு பல வகைகளில் உதவுகின்றன. உணவை அலங்கரிக்கவும், உணவின் சுவையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. பச்சை கொத்தமல்லி அதிகரிக்கும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 

பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் கொத்தமல்லியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. இதன் விளைவால் உடலின் கூடுதல் கொழுப்பும் உருகத் தொடங்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சூப்பர்ஃபுட் ஒரு வரப்பிரசாதம் 

கொத்தமல்லி பானத்தால் உடல் எடை குறையும்

கொத்தமல்லி நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக அறியப்படுகிறது. ஆகையால் இது உடல் எடையை குறைபதில் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. இது செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால், வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு அதிகரிக்கும்.

கொத்தமல்லி தண்ணீர் உடல் எடை குறைப்பில் உங்களுக்கு ஏற்ற பானமாக பயன்தரும். கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பது மிகவும் எளிதானது. இதற்கு, கொத்தமல்லி இலைகளை நன்றாக கழுவி முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி இரவு முழுவதும் இதை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து, இந்த டீடாக்ஸ் தண்ணீரை குடிக்கவும். இது தவிர பச்சை கொத்தமல்லியை அரைத்து அதில் எலுமிச்சையை பிழிந்தும் குடிக்கலாம்.

கொத்தமல்லி விதைகளும் நன்மை பயக்கும்

நீங்கள் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்த விரும்பினால், உலர்ந்த கொத்தமல்லி விதைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலையில் எழுந்ததும் குடிக்கவும். இதுவும் உடல் எடை இழப்பில் பலன் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க| வாயுத்தொல்லையால் பிரச்சனையா: இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News