ஓவர் வெயிட்டா? தினமும் இளநீர் குடிங்க போதும்... சுலபமா குறைக்கலாம்

Coconut Water For Weight Loss: உடல் எடையை குறைக்கும் போது, ​​சரியான நேரத்தில் இளநீரை உட்கொள்வது நல்லது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 07:37 AM IST
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தயங்காமல் இளநீரை தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளலாம்.
  • இதில் கலோரிகள் குறைவாக உள்ளது.
  • வயிற்றுக்கும் இது நல்லது.
ஓவர் வெயிட்டா? தினமும் இளநீர் குடிங்க போதும்... சுலபமா குறைக்கலாம் title=

எடை குறைக்கும் குறிப்புகள்: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

தேங்காய் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும், கோடை காலத்தில் இளநீர் உங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். வெயிலின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் தலைச்சுற்றல், சோர்வு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை சரி செய்ய மக்கள் கோடை காலத்தில் பெரும்பாலும் இளநீர் பருக விரும்புகிறார்கள். 

ஆனால், சிலருக்கு அடிக்கடி இளநீர் குடிப்பது சலிப்பாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் அதற்கு பதிலாக தேங்காய் துருவலையும் சாப்பிடலாம். அல்லது இதை ஷேக்காக செய்து குடிக்கலாம். ஆம், தேங்காய் துருவலை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம். குறிப்பாக அதிக எடை, உடல் பருமன் ஆகியவற்றால் அவதியில் உள்ளவர்களுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும். இளநீர் மற்றும் தேங்காய் துருவலை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு இளநீர் 

இளநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் காரணமாக அதை எந்த நேரத்திலும் குடிக்கலாம். ஆனால், உடல் எடையை குறைக்கும் போது, ​​சரியான நேரத்தில் இளநீரை உட்கொள்வது நல்லது. இளநீரில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் இது உடலை ஹைட்ரேட் செய்வதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தயங்காமல் இளநீரை தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது, வயிற்றுக்கும் இது நல்லது. இதில் பயோ-ஆக்டிவ் என்சைம்கள் நிறைந்திருப்பதால், இது செரிமானத்தை சீராக ஆக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால், உடலின் கொழுப்பு வேகமாக எரிகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருந்தாலும், இளநீரைக் குடித்த பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கிறது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இளநீர் உட்கொள்வதன் மூலம், எடை வேகமாக குறைகிறது.

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகளை பற்றி பார்க்கலாம்:

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: 

இளநீரில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமின்-சி, ஈ, பி1 போன்ற தனிமங்கள் உள்ளன. எது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது.

மேலும் படிக்க | அடிவயிற்று கொழுப்பை ஒரேடியாக குறைக்கணுமா? அப்போ இந்த பானம் மட்டும் போதும்

நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாகிறது

இளநீரில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் நோய் வருபவர்கள் தினமும் இளநீர் அருந்தலாம். இதனால்
இதய ஆரோக்கியம் வலுவாகும்

நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்

இளநீரில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆகையால் உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் தினமும் இளநீர்  குடித்து வரலாம்.

உடனடி எடை இழப்பு

உடல் உப்பசம் அதிகமாகி உடல் எடையை உடனடியாக இழக்க விரும்புபவர்கள், தினமும் இளநீர் குடிக்கலாம். ஏனெனில் இதில் ஆற்றலை அளிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதை குடிப்பதால், ஆற்றல் கிடைப்பதோடு, தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகின்றது. ஆகையால் உடல் எடையைக் குறைக்க இளநீர் மிக உதவியாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் 8,000 அடிகள் நடந்தால்.... வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News