எடை இழப்பு உணவு: உடல் எடையை குறைப்பது சவாலான காரியம் அல்ல. இதற்கு பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உடற்பயிற்சிகள், ஜிம்முக்கு செல்வது, யோகா செய்வது என பலவற்றை செய்கிறார்கள். எனினும், இவற்றை பலரால் தொடர்ந்து செய்ய முடிவதில்ல்லை. எந்த விதமான முயற்சி எடுத்தாலும், உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமாகும். உடல் எடையை குறைப்பதில் 70% பங்கு உணவுக்கு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகையால், சத்தான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். உங்களுக்கு ஏற்ற உணவைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டயட்டீஷியனிடம் ஆலோசனை பெறலாம். நமது உடல் எடையை குறைக்க நமக்கு உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பழங்கள்:
வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் பல வைட்டமின்கள் கொண்ட பல பழங்கள் உள்ளன. அவற்றில் ஆப்பிள் மற்றும் திராட்சை மிக முக்கியமானவை. அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எடை குறைக்க உதவுகிறது. பழங்களில் பாதாமி பழத்தை உங்கள் உணவில் ஒரு பகுதியாக மாற்றலாம்.
மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்
சத்தான காலை உணவு:
காலை உணவாக இட்லி, தோசை போன்ற லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சுரைக்காய், முருங்கைக்காய், கத்தரி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்ற பல வகையான காய்கறிகளை சாம்பாரில் சேர்ப்பது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
விதைகள்:
உங்கள் உணவில் விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். கொழுப்பை எரிக்கும் திறன் கொண்ட பல விதைகள் உள்ளன. இவற்றில் பூசணி, ஆளி விதை மற்றும் சியா விதைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது.
நட்ஸ்:
பாதாம் மற்றும் பிஸ்தாவை வலிமைக்காக சாப்பிட்டாலும், அவை ஒருபோதும் உடல் பருமனை அதிகரிக்காது. பாதாம், பிஸ்தா, பிரேசில் பருப்புகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி ஆகியவை எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. நட்ஸ் கலோரி அளவைக் குறைக்காது, ஆனால் அவற்றை உட்கொள்வது நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. 10 முதல் 12 பாதாம் பருப்பில் சுமார் 1200 கலோரிகள் உள்ளன. ஆனால் இதை சாப்பிட்டால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் அதிக கலோரிகள் கொண்ட பிற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கிறீர்கள்
முட்டை:
உடல் எடையை குறைக்க முட்டையை விட சிறந்தது எதுவுமில்லை. புரோட்டீன் நிறைந்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவது விரைவான எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்பினால் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதை சாப்பிட்ட பிறகு, நீண்ட நேரம் பசி எடுக்காது.
ஓட்ஸ்:
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது காய்கறிகளுடன் ஓட்ஸ் சாப்பிடலாம்.
பனீர்:
பனீரில் புரதச்சத்து நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்கும் உணவில் இதை சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிதில் உடல் எடையை குறைக்கலாம். இதை உட்கொள்வதால் உடல் எடையை குறைப்பதில் பெரிய உதவி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் எடை குறைப்பது கடினமாக உள்ளதா? கொய்யாப்பழம் சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ