சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள்: பிபி முதம் சுகர் வரை... பல காரணங்கள் உள்ளன

Causes For Kidney Damage: பொதுவாக, சிறுநீரக நோய்களை சிறுநீரக கற்களுடன் தொடர்புபடுத்துவார்கள். ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் இல்லாமலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2024, 03:07 PM IST
  • சிறுநீரக பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன?
  • சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
  • சிறுநீரக பாதிப்பை தடுக்கும் வழிகள் என்ன?
சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள்: பிபி முதம் சுகர் வரை... பல காரணங்கள் உள்ளன title=

Causes For Kidney Damage: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படுவது மிக முக்கியமாகும். உடலின் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும்.  சிறுநீரகத்தின் ஆரோக்கியம் நம் உடலுக்கு மிக முக்கியமானது. 

பொதுவாக, சிறுநீரக நோய்களை சிறுநீரக கற்களுடன் தொடர்புபடுத்துவார்கள். ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் இல்லாமலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் பல மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளன. சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். சிறுநீரக கல் தவிர சிறுநீரக பாதிப்புக்கான வேறு சில காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிறுநீரக பாதிப்புக்கான முக்கிய காரணங்கள்

உயர் இரத்த அழுத்தம்:

இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது, சிறுநீரக பாதிப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீண்ட காலமாக அதிக இரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரக வடிகட்டிகள் பலவீனமடைகின்றன. இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.

மேலும் படிக்க | ஆயுர்வேதம்... 2024ம் ஆண்டில் ட்ரெண்டிங்கான சில மூலிகை வைத்தியங்கள்

நீரிழிவு நோய்:

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அது சிறுநீரகத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது. இது சிறுநீரகத்தின் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக சிறுநீரக செயல்பாடும் குறைகிறது.

நரம்புகளின் வீக்கம்:

ஒரு நபரின் நரம்புகளில், குறிப்பாக சிறுநீரக செல்களில் வீக்க பிரச்சனை தொடர்ந்து இருந்தால், அதுவும் சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறியாகும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.

வலி நிவாரணிகளை உட்கொள்வது:

நீண்ட காலமாக மருந்துகளை உட்கொள்வது, குறிப்பாக வலிநிவாரணிகளை உட்கொள்வது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தை சேதப்படுத்துவதில் வலி நிவாரணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது:

உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இது சிறுநீரக கற்களின் உருவாவதற்கும் வழிவகுக்கும்.

சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

- சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பது.
- சிறுநீரகங்களால் உடலில் இருந்து கூடுதல் நீர் மற்றும் உப்பை அகற்ற முடியாமல் போவதால், கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது.
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- மெதுவாக சிறுநீர் கழிப்பது
- உப்பு நிறைந்த உணவை உண்ணும் ஆசை அதிகரிப்பது
- சிறுநீரக செயலிழப்பு காரணத்தால் உடலில் இரத்த பற்றாக்குறையை ஏற்படகூடும்.
- இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

சிறுநீரக பாதிப்பை தடுக்கும் வழிகள்

- பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது.
- இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்க வேண்டும்.
- மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டீ குடிக்கும் போது சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News