புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,58,291. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,34,460ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61,84,379.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,97,413 ஆகவும், பலி எண்ணிக்கை 19,693 ஆகவும் உயர்ந்துவிட்டது.
ஆஸ்திரேலியாவில் COVID-19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, அதிக மக்கள் தொகை கொண்ட இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டது.
COVID-19 நோய்த்தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்தி, மூன்றாம் இடத்துக்குச் சென்றது இந்தியா.
பாரிஸில் மார்ச் 13 ஆம் தேதி மூடப்பட்ட லோவர் அருங்காட்சியகம், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 28,88,635
2. பிரேசில் - 16,03,055
3. இந்தியா - 6,97,413
4. ரஷ்யா - 6,80,283
5. பெரு - 3,02,718
6. சிலி - 2,95,532
பிற செய்தி படிக்கவும் | இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ICMR
7. இங்கிலாந்து - 2,86,931
8. மெக்ஸிகோ - 2,56,848
9. ஸ்பெயின் - 2,50,545
10. இத்தாலி - 2,41,184