சென்னையில், வறுமையின் காரணமாக இறந்த தாயின் உடலை மகன் மோட்டார் சைக்கிளில் வைத்து தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கண்ணன் சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு அருண்குமார், அஜித்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், அருண்குமார் என்பவர், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்தால் அவர் வீட்டுக்கு வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, அஜித்குமாரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த அவர்கள் சிரமப்பட்டனர். இந்தச் சமயத்தில் புவனேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை இறந்த புவனேஸ்வரியின் உடலை மோட்டார் சைக்கிளில் படுக்க வைத்தபடி விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானத்துக்கு கண்ணன் தள்ளிச் சென்றுள்ளார். உடல் கீழே விழாமல் பிடிப்பதற்காக மனைவியும் உடன் நடந்து அழைத்து சென்றுள்ளார்.
அதிகாலை நேரம் என்பதால் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையே மின்மயானம் வழியாக சென்ற போது அதை பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து வரப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப வறுமை மற்றும் உறவினர்கள் கைவிட்டதால் தாய் புவனேஸ்வரி உடலை மின் மயானத்துக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததாக கண்ணன் கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, புவனேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கண்ணன், அவரது மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன் தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கே.கே.நகர் காவல் நிலையத்தில், புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.