மும்பையில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! 2 நாட்களில் மஹாராஷ்டிராவில் 3 நிலநடுக்கங்கள்!!

மகாராஷ்டிராவில் 2 நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள். ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தொலைவில் சனிக்கிழமை காலை 6:36 மணிக்கு ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2020, 01:39 PM IST
  • மும்பைக்கு அருகே சனிக்கிழமை காலை 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
  • வெள்ளிக்கிழமை காலை 10:33 மணிக்கு மும்பைக்கு வடக்கே 91 கி.மீ தொலைவில் 2.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • வெள்ளியன்று இரவு 11:41 மணிக்கு, 4.0 ரிக்டர் அளவிலான நடுக்கம் நாசிக்கிற்கு மேற்கே 98 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.
மும்பையில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! 2 நாட்களில் மஹாராஷ்டிராவில் 3 நிலநடுக்கங்கள்!! title=

மும்பை: ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தொலைவில் சனிக்கிழமை காலை 6:36 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 10:33 மணிக்கு மும்பைக்கு (Mumbai) வடக்கே 91 கி.மீ தொலைவில் 2.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

"2.7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் 05-09-2020, 06:36:31 அன்று ஏற்பட்டது. Lat: 19.96 & Long: 72.83, ஆழம்: 5 கி.மீ, இடம்: மகாராஷ்டிரா (Maharashtra) மும்பையிலிருந்து வடக்கில் 98 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது” என என்.சி.எஸ் ட்வீட் செய்துள்ளது.

ALSO READ: கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவை தாக்கிய மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 10:33 மணியளவில் மும்பைக்கு வடக்கே 91 கி.மீ தொலைவில் 2.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பின்னர் அதே நாளில் இரவு 11:41 மணிக்கு, ரிக்டர் அளவில் 4.0 ரிக்டர் அளவிலான நடுக்கம் மகாராஷ்டிராவில் நாசிக்கிற்கு (Nashik) மேற்கே 98 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.

ALSO READ: “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!

 

Trending News