நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய கல்வி மந்திரி

நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 3, 2021, 07:06 AM IST
நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய கல்வி மந்திரி title=

நாடு முழுதும் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று மத்திய கல்வி அமைச்சரும் (Education Minister Dharmendra Pradhan) பாஜக கட்சியை சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது., மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி., (UGC) எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது.

ALSO READ | UGC: பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு நடத்தினால் போதும்

யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு பல்கலைக்கழகங்கள், டெல்லியில் ஏழு பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்கள், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

இந்த போலி பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ALSO READ | ஐஐடி மெட்ராஸ் ஐஐடி சென்னை என பெயர் மாற்றமா? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News